Saturday, May 12, 2018

விரதம் - பாபாவின் வழி!



பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை.  மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை.  விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை.  பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்?  வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார்.  முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும்.  வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர் தம் புகழை எந்நாவுடன் இசைக்க முடியும்?  கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்?  அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?
சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகட்குரிய போஷிப்பைப் பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும்.  எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது.  உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது".                                                                                   
 சாயி சத்சரிதம் அத்தியாயம்-32 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...