பாபாவின் அன்புக்கு எல்லையே கிடையாது. தம் பக்தர்களுக்கு
எந்தவிதக் குறைவுமின்றி பலவிதங்களில் அவர் உதவி வருகிறார். முக்கியமாக பாபா உதவும்
முறை மூன்று வகைப்படும் எனக் கூறலாம்.
( 1 ) நாம் கஷ்டத்திலிருக்கும்
போது, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை பாபா நம் உள்ளுணர்வாகத் தோன்றச் செய்கிறார்.
இது நாம் நல்ல நினைவோடு விழித்திருக்கும்போது ஏற்படும் உணர்வு என்பதையறிந்து
அதன்படி நடப்பதால் பயன் கிட்டுகிறது.
( 2 ) கனவுகளிலோ, மெய்மறந்த நிலைகளிலோ
பாபாவின் உருவம் நம்முன் தோன்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணரச் செய்கிறது.
( 3 ) நம் மனதில் உள்ள சிக்கலை அவிழ்க்க
வேறு ஏதோ வ்யஜத்திற்காக பாபா நம்மை சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதரிடம்
அனுப்புவது.
என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான்
உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய். இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப்
போகிறாய்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால்
நான் சொல்ல வில்லை நான் உன்னுடன் இருக்கும் போது, உனது கவலைகளை எனது பாதத்தில்
வை அதன் பின்னர், நடப்பதை பார் உன்னைப் படைத்தவன் நான்,
.
நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்
உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது. எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு
பூஜை செய்தாயோ, அப்போதே உன்னுடைய
கர்மபலன்கள் பொடி பொடியாகும். எனது காலடியில்
நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும்
பரிட்ச்சைதான் நீ படும் வேதனை.
உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை
விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.
எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால் உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில் அது உன்னை தேடி வரும். யாருக்கும் இல்லை என்று சொல்லாதே. யாரையும் வெறுத்து
ஒதுக்காதே. உன்னை தேடி நான் வர போகிறேன்...."
No comments:
Post a Comment