Tuesday, May 15, 2018

தேள்கடி



நாசிக்கைச் சேர்ந்த நாராயண் மோதிராம் ஜனி என்பவர் பாபாவின் அடியவர்.  இவர் ராமச்சந்திர வாமன் மோடக் என்ற பாபாவின் மற்றுமொரு அடியவரின் கீழ் வேலை பார்த்து வந்தார்.  ஒருமுறை அவர் தமது தாயாருடன் சென்று பாபாவைப் பார்த்தார்.  அப்போது பாபா அவளிடம், அவரது மகன் இனிமேல் வேலைசெய்யக் கூடாதென்றும், சுய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார்.  சில நாட்களுக்குப் பின் இவ்வுரை உண்மையானது.  நாராயண் ஜனி வேலையை விட்டுவிட்டு ஆனந்தாஸ்ரம் என்ற ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.  அது செழிப்பாக வளர்ந்தது.
ஒருமுறை இந்த நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது.  அதனால் ஏற்பட்ட வலி தீவிரமானது.  தாங்கிக்கொள்ள முடியாத வலி ஏற்படுத்தும் அத்தகைய சந்தர்ப்பங்களில் பாபாவின் உதி மிகவும் பலனுள்ளது.  வலிக்கும் இடத்தில் அது தடவப்படவேண்டும்.  எனவே நாராயண் உதியைத் தேடினார்.  ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
பின்னர் அவர் பாபாவின் படத்தின் முன் நின்று பாபாவின் உதவியை வேண்டி, அவர் நாமத்தை ஜெபித்து பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகையினை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக்கொண்டு வலிக்கும் இடத்திலும், கடிவாயிலும் தடவினார்.  அவர் விரலை எடுத்த உடனேயே வலி மறைந்துவிட்டது.  இருவருமே உணர்ச்சிவசப்பட்டுப் பெருமகிழ்ச்சியுற்றனர்.
                                                                                            சாயி சத்சரிதம் அத்தியாயம் -33

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...