Thursday, October 31, 2013

பக்தை அளித்த பால் பேடா

கோவிந்த் பல்ராம் மன்கர் என்பவர் ஒரு முறை ஷீரடிக்கு செல்ல இருந்த சமயம், அங்குச் செல்லுமுன் திருமதி தாரகத் என்ற பக்தையை பார்க்கச் சென்றார். பாபாவிற்கு அன்புடன் எதாவது கொடுத்து அனுப்ப எண்ணிய  அந்த பக்தை வீடு முழுதும் தேடி, எதுவும் கிடைக்காமல் இறுதியில், ஏற்கனவே நிவேதனம் செய்த பால் பேடாவை கண்டவர், அதனை  பாபா ஏற்பாரா மாட்டாரா என்று துளிக்கூட எண்ணாமல்,  பாபா மேல் கொண்ட அன்பினால், அதை பாபா ஏற்பார் என்று நம்பிக்கை கொண்டு  பாபாவிடம் கொடுக்குமாறு சொன்னார்.
 கோவிந்த் பல்ராம், சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யச் செல்லு முன், பால் பேடா கொண்டு செல்ல மறந்து விட்டார்.
 சர்வமும் அறிந்த பாபாவோ "எனக்கு என்ன கொண்டு வந்தாய்?" என்றார்.
கோவிந்த் " எதுவும் இல்லை" என்றார்.
மறுமுறை தரிசனம் செய்தபோதும்,  பாபா இதையே கேட்டார்.
கோவிந்தும் ஒரே பதிலை சொன்னார்.
பாபா உடனே அவரிடம் "தாரகத் எனக்கு எதுவும் கொடுக்கவில்லையா ?' என்று கேட்ட போதுதான், அவருக்கு ஞாபகம் வந்து,  அவரது தங்குமிடம் சென்று பேடாவை கொணர்ந்து கொடுத்தார்.
பாபா அதனை மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டார்.
பக்தியுடனும் அன்புடனும் அளிக்கும் தனது பக்தர்களின் காணிக்கையை அது எத்தகையது ஆயினும் ஏற்பார் அந்த பெருமான்.
அந்த சற்குருவை வணங்கி சாய் ராம் என்று கூவி நம்பி அவரைப் பணிவோம்.

ஜெய் ஜெய் சாய்ராம்.

சாயியின் அருள்



       ஸாயீயினுடைய அருள் பலஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவதுபோல் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 
      சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது. 
புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றி­ருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்?
 
      கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.
 
     ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்?
 
     தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது. 
      அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை. 
      பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லை.
      ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; 'செயல் புரிபவரைப்பற்றற்றவராகவும் தூயஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார். 
      உலகவிவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் 

இருந்தார். பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை 

அது.  தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் 

பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ ஆசனத்தி­ருந்து 

எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு 

நகர்ந்துவிட்டார். 

     இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை


பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு 

அருள்புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை 

இவ்வாறே. 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

காகா புராணிக்



தோபேச்வர் என்னும் ஊரைச் சேர்ந்த ரகுநாத் (1821 - 1910) ஒரு சித்தர். 'காகா புராணிக் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர். பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் டாக்டர் பண்டித்துக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகிவிட்டார். 
      பண்டித் தம் குரு காகாவைக் கூவி அழைத்தார். அதனால் ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பெருக்கு அன்றோ.
      இருந்தபோதிலும், பூஜைச் சடங்குகள் எல்லாம் பாபா விரும்பியபோதுதான் அனுமதிக்கப்பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களையெல்லாம் விசிறி அடித்துவிடுவார். 
      நரஸிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிடுவர். 
      சிலசமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள்மீது காட்டுவார். மற்றசமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார். 
      சில நேரங்களில் காலாக்கினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சிலசமயங்களில் வெண்ணெயைவிட இளகியவராக உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.
 
     வெளிப்பார்வைக்குக் கோபத்தால் அவர் நடுங்கலாம்; கண்விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்குக் குழந்தையின்மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.
 

      அடுத்த கணமே தம்முடைய சுய சாந்திநிலையை மீண்டும் அடைந்து பக்தர்களைத் தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், ''நான் யார்மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.-- தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன். நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Wednesday, October 30, 2013

பாவச் சுமையினை குறைத்தல்

        சாய் நாதர் தினமும் வீடு வீடாகச் சென்று உணவு பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஐந்து வீடுகளுக்கு செல்வார்.
        எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏன் இந்த நிலை என்று பலர் வியந்தனர்.  அவர் நினைத்தால் உலகுக்கே உணவு படைக்கலாமே எனவும் பேசினார். சந்ததிசெல்வம், புகழைத் துறந்தவர் என்றும் யாசித்தே உணவு பெருவர்.
        ஏனெனில் சன்யாசிகள் அவர்களுக்கு  என்று எதுவும் இல்லாத நிலையில் யாசித்தே உணவு பெருவர்.   அவர்களுக்கு உணவு அளிப்பது சம்சாரியின் கடமை என சாத்திரம் சொல்கிறது.
        ஆயினும் சாய் ஒரு சந்நியாசி அல்லவே ! மேலும் அவர் சம்சாரியும்  அன்று!  அவருக்கு உலகே வீடு. உலகோரைக் காப்பதுவே அவர் செயல். எனவே அவர் செய்யும் எந்த ஒரு செயலையும் விமர்சிக்க இயலாது   மற்றும் அவர் மக்களை பாவச் சுமையிலிருந்து காக்கவே பிச்சைப் பாத்திரம் சுமந்தவர்.
   சரி, இது ஏன்,  எவ்வாறு என்று அறிவோமா ?
       உணவு தயாரிக்கையில் அதாவது கழுவுவது, இடிப்பது, அரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பல கிருமிகளையும், ஜந்துக்களையும் நாம் கொல்ல நேரிடுகிறது.  அதனால் ஏற்படும் பாவச் சுமைகளுக்குப் பரிகாரத்தினையும் சாத்திரம் சொல்கிறது. பிரம்மனுக்கோ, தேவருக்கோ, வேதத்திற்கோ பித்ருக்களுக்கோ அல்லது வீடு தேடி வரும் அதிதிக்கோ உணவிட்டால் பாவ விமோசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறது.

          சாய்ராம் அவ்வாறு பிச்சை கேட்டுச் சென்றதன் மூலம் மக்களை பாவத்திலிருந்து காத்து, அவர் தம் பாவத்தினை அவரே இரந்து பெற்றார்.            இதன் மூலம் நாம் எல்லோரும் உணர வேண்டியது,  'இல்லார்க்கும் வறியவர்க்கும் உணவிட வேண்டியது நம் கடமை மட்டுமின்றி, அச்செயல் நம் பாவச் சுமையையும் குறைக்கும்'  என்பதுவே.

சாயியின் கிருபை!



      உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிர்டீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முத­ல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும். 
      சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது. 
விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
 
      புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார். 
     ஆஹா! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார். வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார். 
     இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்லி­யே தீரவேண்டியிருக்கிறது. 
     பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ''அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா­.லி.”
      , பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார். எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல். எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை. எவ்வளவு மரியாதை. பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். 

      என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக் 

காதுகொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்துகொள்ள 

வேண்டுமெனில், ஸாயீநாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் 

அகன்றுவிடும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Tuesday, October 29, 2013

நம் கவனம் அவன் மீது



ஹரி கநோபா என்பவர் சாய் லீலைகளைப் பற்றி கேள்விப்பட்டு,
அவற்றை நம்பாமல் சாயியை தாமே நேரில் சென்று சோதிக்க நினைத்தார்.  அதன் பொருட்டு அவர் சில நண்பர்களுடன் மும்பையிலிருந்து  கிளம்பி சீரடி வந்தார். அவர் தலையில் அழகிய ஜரி வேலைப்பாடு செய்த பாகை அணிந்திருந்தார் மற்றும் புத்தம் புதிய பாத அணியும் அணிந்திருந்தார்.
பாபாவை சற்று தொலைவில் கண்டதும் அவரை அருகில் சென்று வணங்க எண்ணிய அவர்,  புதிய பாகையையும் பாத அணியையும் கழற்றி ஓரிடத்தில் வைத்தார். ஆனால் அவர் முழு கவனமும் அவற்றின் மீதே அவருக்கு இருந்தது.
 பாபாவை நமஸ்கரித்து விட்டு திரும்பியவர், அவரது விலை உயர்ந்த பாத அணி தொலைந்திருக்க கண்டு திடுக்கிட்டு, மனம் ஒடிந்து மதியம் உணவு அருந்த அமர்ந்தார்.
அப்போது மராத்திய சிறுவன் ஒருவன் அவரது பாத அணிகளை ஒரு குச்சியில் சொருகியபடி வருவதைக் கண்டார்.
வந்த சிறுவன் நேராக அவரிடம் வந்து "உங்கள் பெயர் ஹரியா? கநோபாவின் மகனா? என்று கேட்க. அதற்க்கு ஆம்என்று ஹரி கநோபா பதில் அளித்ததும்,  அவரிடம் அந்த பாத அணியை அச்சிறுவன் தந்தான்.
எப்படி நீ என் பெயரினை கண்டு பிடித்தாய்? என்று ஹரி அச்சிறுவனிடம் கேட்டார்.
        அதற்கு அவன்,  பாபா அவர்கள் என்னிடம் இந்த காலணியை தெருவில் எடுத்துக் கொண்டு போய் " இங்கு கநோபாவின் மகன் இருக்கிறாரா? ( ஹரி கா பேட்டா ) அவர் ஜரி தலைப்பாகை அணிந்திருப்பார் ( ஜரி கா பேதா ) என்று கூவி, உனக்கு திருப்தி அளித்தால் உரியவரிடம் சேர் " என்று சொன்னதாக கூறினான்.
ஹரி கநோபா "நான் ஜரிகை தலைப்பாகை அணிந்திருந்ததை எல்லோரையும் போல் பாபாவும் பார்த்திருப்பார். ஆனால் நான் கநோபாவின் மகன் என்று எப்படி அறிந்தார்?   எனவே பாபா யாவும் உணர்ந்த , அறிந்த மகான் என்பதில் ஐயமில்லை என்று வியந்தார்.
  இறைவனை வணங்கும்போதும் இறை உருவாகிய குருவை வணங்கும்போதும் நம் கவனம் அவன் மீதுதான் இருத்தல் வேண்டுமே அன்றி நம் மறுமைக்கு உதவாத பொருட்கள் மீது இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி அவன்  மீது அளவற்ற நம்பிக்கை வைத்தல் வேண்டும்.சந்தேகம் என்பதே கூடாது.

  சத்குரு ஸ்ரீ சாயியை நம்பி  வணங்குவோம்.

சீரடிவாசிகள்



      அழியக்கூடிய மனித உடலை ஏற்றுக்கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின்மேல் பற்றேதும் இல்லை. வெளிப்பார்வைக்கு உட­ல் இருந்தாரே தவிர, அகமுகமாக உட­ன்மீது பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்கமுடிந்தால், அவருக்கு அந்த ஜன்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும். 
      உணவுண்ணும்போதும் நீரருந்தும்போதும் தூங்கும்போதும் ஸாயீயையே

 இடைவிடாது ஞாபகப்படுத்திக்கொண்டு, ஸாயீ வழிபாட்டையே தெய்வ 

வழிபாடாகக் கொண்டவர்களான சிர்டீ மக்கள் புண்ணியசா­லிகள். 

      கொட்டி­லும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் உர­லே 


தானியத்தைக் குற்றும்போதும் ஏந்திரத்தில் மாவு அரைக்கும்போதும் தயிர் 

கடையும்போதும் அவர்களை பாபாவின் மஹிமையைப் பாடச்செய்யும் 

பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை. 

      சாவகாசமாக உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் சாப்பிடும்போதும் 


தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் 

தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் அவர்கள் 

வழிபடவில்லை.

      , சிர்டீயின் மகளிர் பாபாவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்


அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானது. இம்மாதிரியான 

தூய அன்புதான், மகிழ்ச்சிதரும் பாட்டுகளைக் கவனம் செய்வதற்குண்டான 

(இயற்றுவதற்குண்டான) உணர்வை ஊட்டுகிறது; பாண்டித்தியம் இங்கே 

செல்லாது. 

     மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் 

சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக 

வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரஸிக்கும்படியாக 

இருந்தது. உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு 

அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும். 

      ஸாயீபாபா விரும்பினால், சிர்டீயின் மகளிர் பாடிய எல்லாப் 


பாட்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் 

செய்யமுடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை 

நிறைவேறும். 


ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Monday, October 28, 2013

முக்தி

சென்னையிலிருந்து விஜயானந்த் என்ற ஒரு சந்நியாசி மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பினார், அவ்வாறு அவர் செல்லும் வழியில் பாபாவின் பெருமைகளை கேள்விப்பட்டு ஷீரடியில் இறங்கினார்.
      சோம்தேவ் சுவாமிஜி என்பவரிடம் மான சரோவர் யாத்திரைக்கான வழிகளை கேட்டார்.  அவரோ அது மிகவும் குளிர் மிகுந்த பகுதி, மேலும் பல மொழிகளை பேசுவோர் உள்ளனர். மேலும் அது ஒரு மிகக் கடினமான பயணம் என்று கூறினார்.
இதனால் விஜயானந்த் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். பின்னர் பாபாவை தரிசிக்கச் சென்றார்.
"இந்த சந்நியாசி இங்கு எதற்கு வந்தார்?" என்று பாபா கடிந்து கொண்டார். (பாபாவின் கோபம்,சாந்தம், இன்மொழிகள், கடிந்துகொள்ளல் யாவைக்குமான  காரணங்கள் அவர் மட்டுமே அறிந்தவை)
மனம் வருந்தினாலும் அந்த சந்நியாசி பாபா தரிசனத்திலே இரண்டு நாட்கள் கழித்தார்.
பிறகு "தாயார் உடல் நிலை சீர் கெட்டு விட்டது" என்ற ஒரு தகவலுடன் வந்த தந்தியை பாபாவிடம் காட்டி ஊர் திரும்ப சம்மதம் கேட்டபோது, அதற்க்கு பாபா அவரிடம் "தாயாரிடம் பாசம் இருப்பவர் எதற்கு சந்நியாசி ஆக வேண்டும்? பந்த பாசங்களை ஒழித்து இறைவனின் அடி பணிவதல்லவோ சன்யாசிக்கு அழகு?”  என்றார்.
பின்னர் " உன் குடியிருப்பில் சென்று அமைதியாக அமர். பாகவதம் மூன்று முறை படித்து முடி. ஆசைகளை விட்டொழி. ஹரியை சரணடை" என்றார். மேலும் அவரது இறுதி நெருங்கி விட்டதை அறிந்த பாபா "ஸ்ரீ ராமா விஜயமும் " படிக்கப் பணித்தார்.
லேண்டி தோட்டத்தில் அமர்ந்து பாகவதம் படிக்க ஆரம்பித்தவர் களைப்படைந்து, அங்கிருந்து பாபாவிடம் வந்தவர், அவர் மடியிலேயே உயிர் நீத்தார்.  என்ன ஒரு பேரின்பம்! என்ன ஒரு பாக்கியம்! பெரும் பேறன்றோ !
வேறு பாதையில் செல்ல இருந்தவரிடமும்,தன் திருஷ்டியை செலுத்தி தம்மிடம் வர வைத்து முக்தி அளித்தாரே! பாபாவை சரணடைந்தால் எத்தகைய பேறும் அவரருளால் நமக்கு கிட்டும் என்று உணர்த்தும் இச் சரிதத்தைப் படித்துப் பயனடைவோம்!

சாய் ராம்! சாய் ராம்! சாய்ராம்!

இறைவனால் நியமிக்கப்பட்டவர்


     தேஹாபிமானத்திற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின்மீது அத்தியந்தமான பிரீதியைச் செலுத்தும் மாண்புடையவர் இந்த ஸாயீ.   குருமார்களில் இரண்டு வகையுண்டு; 'நியத (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநியத (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்). இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்கம் செய்கிறேன். 
    நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப்படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்க்கத்தில் வழிநடத்துவதற்கு உண்டான வரப்பிரஸாதத்தை மாத்திரம் உடையவர் 'அநியத குரு. 
      ஆனால், 'நியத குருவினுடைய சம்பந்தமோ, துவைத பா(ஆஏஅ)வத்தை அழித்து, 'தத்வமஸி (நீயே அதுவாக இருக்கிறாய்) என்னும் ஸாமவேத மஹாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது. 
      இம்மாதிரியான 'நியத குருமார்கள் தோன்றாநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்றனர்; பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக்கொண்டு அவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும்போது உடலை உகுத்துவிடுகின்றனர். 
   
      ஸாயீ நியத பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும். 
     உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மஞானத்தை அளிக்கிறாரோ, அவரே ஸத்குரு. ஸத்குருவே சம்சாரக் கட­ன் மறுகரையைக் காட்டமுடியும்; அவருடைய மஹிமை எண்ணத்திற்கப்பாற்பட்டது. 
      யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால ரகசியங்களனைத்தும் அவர் கேட்காமலேயே அவருக்குச் சொல்லப்படும். 
     இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட ஸாயீ, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்டவில்லை. 

      அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக்கோணல்) அவரைத் தொடவேயில்லை. 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Sunday, October 27, 2013

நானாவலி என்ற பக்தர்

     தர்கத் என்ற குடும்பத்தினரின் அனுபவ பூர்வ விவரிப்பின்படி , நானாவலி என்று ஒரு சாய் பக்தர் இருந்தார். அவர் பலவித சேஷ்டைகளும் செய்பவர். கோமாளிபோல் தோற்றமும் நடவடிக்கையும் கொண்டவர். அவருக்கு  ஹெர்னியா எனும் உடல் உபாதை இருந்ததால், அவர் எப்போதும் உடலின் பின் புறம் வால் போல் ஆடையை சுத்தி இருப்பார். அதன் பொருட்டு சிறிது கோணல் மாணலாக நடப்பார். வீதியில் அவர் நடந்தால் சிறுவர்கள் அவரை கேலி செய்து துன்புறுத்துவர். அவரோ வெகுவேகமாய் சாயிடம் சரண் புகுவார். பணம் பொருள் தேடி ஷீரடிக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கையை கேலி செய்வார். ஆயினும் ஸ்ரீ சாய் பக்தியில் அனுமனுக்கு அவர் நிகராம்.

        ஒருமுறை பாபாவை தனது இருக்கையை விட்டு எழச் சொல்லி,
அதில் தான் அமர்ந்து எழுந்து, மீண்டும் பாபாவை இருக்கையில் அமரச் சொன்னார்.
        பின்னர் "இந்த இருக்கையில் நீங்கள் ஒருவர் மட்டுமே அமர முடியும்  நான் எப்பவும் உங்கள் காலடியில் அமரவே விரும்புகிறேன் என்றார்.
        பாபாவை இப்படி உரிமையுடன் எவரால் இருக்கையை விட்டு எழச் சொல்லமுடியும்?  பாபாவும் தன் அன்பு பக்தருக்காக அடி பணிந்தாரே!
ஒருமுறை நானாவலி  கவல்யாவை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
மசூதியின் உள் புகுந்ததும் தன் உருவத்தைச்  சுருக்கி  உத்தரத்திலிருந்து இறங்கும் கண்ணாடி விளக்கைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். இவ்வாறு உருவத்தைச் சுருக்க எவரால் இயலும் ஹனுமனை அன்றி?
        பாபா மகா சமாதி அடைந்ததும் மிக்க துயரத்தில் ஆழ்ந்த நானாவலி  பதி மூன்றாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
        ராம பக்தியில் ஸ்ரீ ஹனுமாருக்கு நிகராக ,சாய் ராம பக்தியில் பக்தி செய்தல் என்பதற்கு இலக்கணமாக இருந்த நானாவலியின் வழியை நாமும் பின் பற்றுவோம் .சாயி நாதர் அருள் பெற வேண்டின் அறிவுடையவராகவோ, செல்வம் உடையவராகவோபெரும் பதவியிலிருப்பவராகவோ, உருவ பொலிவு உடையவராகவோ, ஏன் மனித இனமாக மட்டுமே கூட  இருத்தல் ஒரு தகுதி ஆகா. புழுபூச்சிபக்ஷிமிருகம்போன்ற எல்லாவற்றையும் நேசிக்கக் கற்று கொடுத்த ஆசான் அல்லவா அவர்!
       ஷீரடியில் லேண்டி தோட்ட முகப்பில் இருக்கும் அந்த நானாவலி என்ற  பக்தரின் சிலையை வணங்குவோம்

        சாய் ராம் சாய் ராம் சாய்ராம்

ஸாயி மூர்த்தி


      கி.பி. 1681ஆம் ஆண்டு ஞானி ராமதாஸர் ஸமாதியடைந்தார். அதிலி­ருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார். 
     பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது; ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பக்திமார்க்கம் படிப்படியாக நசித்துப்போயிற்று; மக்கள் அறவழியி­ருந்து புரண்டனர்.
 அந்த சமயத்தில் ஞானி ராமதாஸர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்ஜியத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களி­ருந்து அவர் காப்பாற்றினார். 
     இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளேயே மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவைச் சரிக்கட்ட முயன்றார்.
 
   ராமனும் ரஹீமும் ஒன்றே; அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும்? ஒருவரையொருவர் ஏன் வெறுக்க வேண்டும்? 
      ! என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்! நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றுசேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தரும சிந்தனையும் உங்களுடைய மனத்தில் ஆழமாக வேர்விடட்டும்.  வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய க்ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும். ஸ்ரீஹரி நம்மைக் காப்பார். 
   யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண். 
     ''யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் (எதிரடி) செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும். இதுதான் பாபாவின் உபதேச சாரம். 
      ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்துக்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் இந்த உபதேசம் நன்மையளிக்கக்கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர், பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம். 
      கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார். 
     எவர் 'இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயைஃ என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்கப் பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார். சிஷ்யர்களின் உலக பந்தங்களைக் கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டுவிட வைப்பது என்பதுபற்றியே பாபா இரவுபகலாகச் சிந்தித்தார். 
      'யானும் இறைவனும் ஒன்றே என்னும் பாவமும் அகண்டமான ஆனந்தநிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப ஸமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும் துறவும் அடைக்கலம் புகுந்தன. 
வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடுவீடாக அலைந்து கைநீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது.
 
      மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை எத்தனையோ. தாங்களே அதர்மநெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமநெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை ஸம்ஸாரக் கடலைத் தாண்டவைத்து, ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலை பெற்றுத்தர முடியும்?
 

      தம்முடைய தருமநெறிப் பெருமையை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றிபெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக ஸாயீ விளங்கினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...