Tuesday, October 22, 2013

சாயி இருக்க பயமேன்!


       தியோ என்ற பக்தர் "ஞானேஸ்வரி" என்ற பக்தி நூலை படிக்க விரும்பினார்.  பல பக்தி நூல்களையும் படிப்பார். ஆயினும் இந்த நூலை எடுத்தால் படிக்க இயலாமல் தடை வந்து  தவித்தார். சாயிநாதரை தரிசித்து இதற்கு வழி தேட விரும்பினார்.
      ஷிர்டி வந்ததும் ஜோக் என்பவரிடம் இதைச் சொன்ன போது,
ஜோக் அவரிடம் "ஒரு புத்தகத்தை வாங்கி பாபாவிடம் கொடுத்து ஆசி பெற்று  பின்னர் படிக்க ஆரம்பியுங்கள்" என்றார்.
              "ஏன் என் மனதில்  இருப்பதை  பாபாவே அறிந்து கொள்ளட்டும் என்றார்.  பாபாவை தரிசித்த போது,  அவரிடம் பாபா  இருபது ரூபாய் தட்சிணை கேட்டார்.
     அன்று இரவு தியோ,  பல்க்ராம் என்பவரை சந்தித்தார்.  அவர் "மதிய ஆரத்தி முடிந்ததும் நான் பாபாவிடம் என் மன குறையை சொல்வது
வழக்கம்" என்றார்.
       மறு நாள் பாபா மீண்டும்  தியோவிடம் தட்சிணை கேட்ட போது,
கூட்டம் அதிகம் இருந்ததால் தியோ தனியே அமர்ந்து விட்டார்.
       அங்கே வந்த பல்க்ராமிடம், பாபா உங்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக்கொடுத்தார் .... தியானம் சொல்லிக்கொடுத்தாரா என்றெல்லாம் பல கேள்விகள் வினவினார்.
        சிறிது நேரம் கழித்து பாபா தியோவை கூப்பிட்டனுப்பினார். அவரிடம் "தங்க சரிகையில் நெய்த பட்டாடை இருக்கையில் கந்தலாடை எதற்கு? என்று கேட்டார்.   பிறகு மிகவும் கடிந்து கொண்டார். அப்போதுதான் தியோ பாபா சொன்னதை புரிந்து கொண்டார்.
        சரிகை ஆடை போல் சாயி இருக்கும் போது மற்றவரிடம் ஏன் கேட்கிறாய் என்று பகவான் சொன்னதின் பொருள் என்று அறிந்தார். பாபா அவரிடம் "தினமும் ஞானேஸ்வரியிலிருந்து ஒரு பக்கம் படி. படித்ததை மற்றவர்க்கும் விரித்துச் சொல்" என்றார். தியோ மிகவும் மகிழ்ந்தார்.
        மறு வருடம் கனவில் பாபா தோன்றி "இப்போது புரிகிறதா? "என்ற போது, "இப்பொழுதும் புரியவில்லை" என்று தியோ சொன்னார்.
        “நிதானமாக கவனமாக படி. இப்போது என் முன் படி.  ஞான மார்க்க அத்தியாயத்தை படி என்றார் பாபா.    புத்தகத்தை எடுத்து வர செல்கையில் அவரது கனவு கலைந்தது.  தியோ அடைந்த பரவசத்திற்கு எல்லை எது?
   ஞானமற்றோற்கு ஞானம் அளிப்பதும், படிப்படியாக பாமரனும் புரிந்து கொள்ளும்வண்ணம் அருள் புரிந்து தெளிவிப்பதும் ஸ்ரீ சாயியின் கருணைதானே! மேலும் குருவிடம் நேரடியாக சரணாகதி அடைவது ஒன்றே சிறந்த வழி என்ற நெறியையும் இது விளக்குகிறது.
   சாயி இருக்க பயமேன்?  மனக்குறையை அவரிடம் நேரே சொன்னாலே போதுமே.  பக்தருக்காக உடனே வருவாரே?

      சாயி ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...