Wednesday, October 23, 2013

அதிதி யார்?



அதிதி யார்?

     பாபாவின் பக்தரான நானா சந்தோர்கர் தினமும் அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
     ஒரு நாள் பாபாவிடம், “நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு அளித்துவிட்டு, அதிதிகளுக்காக காத்திருப்பேன்.  ஆனால் யாரும் வருவதில்லையே! அது ஏன்? “ என்று வெகுளித்தனமாக கேட்டார் சந்தோர்க்கர்.
     நீ இப்படிச் செய்வதை ஏன் வழக்கமாகக் கொண்டிருக்கிறாய்? என்று திருப்பிக்கேட்டார் பாபா.
     சாஸ்திரங்களும் வேதங்களும் அப்படித்தான் சொல்லியிருக்கின்றன. அதைத்தானே நான் கடைப்பிடிக்கிறேன்”  என்றார் நானா.
     நானா,  சாஸ்திரங்களில் தவறில்லை.  வேதங்களிலும் குறையில்லை.  ஆனால் அவைகளின் உண்மையான பொருளினை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறாய்.  அதனால் அதிதிகளுக்காக தினமும் காத்திருந்து, விசனப்பட்டுக் கொள்கிறாய்.
     அதிதி என்பவர் யார்?  தவக்கோலத்தில் வரும் அந்தணர்கள் மட்டும்தான் அதிதியா?  மனித உருவில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவில் இருப்பது கூட அதிதிதான்.  நீ உணவளிக்கும்போது அதனை உண்பதற்க்காக பசியுடன் அல்லது எது வந்தாலும் அது அதிதி என்பதை அறிவாயாக.
     ஐம்பது – நூறு காக்கைகள் வரும்போது அன்னத்தை அவற்றிற்கு வழங்கு! அதைச் சாப்பிடுவதற்க்காக அவற்றினை உரக்கக் கூப்பிடவேண்டாம்.  உயிருள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று முதலில் நினை.  உனது மனதை இப்போது முதல் இவ்வாறாக மாற்றிக்கொள்.  அப்படிச் செய்தால் லட்சக்கணக்கான அதிதிகளுக்கு அன்னமிட்ட புண்ணியம் உனக்குக் கிடைக்கும்”  என்று சீரடி வாசன் விளக்கம் அளித்தார்.
     நானா தெளிவடைந்தார்.  இதனையே பாரதியார், காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று அன்றே அவைகளை அதிதிகளாகப் பாவித்து வீட்டிலிருந்து அரிசிகளை அள்ளி வழங்கினார்.
     மகான்களும், தீர்க்க தரிசிகளும் உயிரினங்கள் எல்லாவற்றையும் ஒரே நிலையில் பாவித்தனர்.  நாமும் அதனை மேற்கொண்டால் பாபாவின் அருள் நிச்சயம் நமக்குக் கிடைக்கும்.
'

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...