விக்கரமாதித்ய மகாராஜாவின் சிம்மாசனத்தில் இருந்த
பதுமைகள் கதை சொன்னதைப் போல், பாபாவின் வரலாற்றிலும் இத்தகைய நிகழ்வு உண்டு.
சீரடிக்குச் செல்லும் சாயி பக்தர்கள், பாபா பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கலாம்.
இவற்றைப் பற்றி தெரிந்து சென்றால் பார்ப்பதில் தெளிவும் கிடைக்குமல்லவா? எனவே இவற்றினை பார்ப்போம்.
சிம்மாசனம்
துவராகமாயியில் வைக்கப்பட்டிருந்த
சிம்மாசனம், இப்போது மியூசியத்தில் உள்ளது.
இதை காந்த்வா என்ற இடத்தைச் சேர்ந்த புருஷோத்தம் ராவ் என்ற பக்தர்
அளித்தார். இவர் சாயி பக்தரான காகா சாகேப்பின் சகோதரர்.
ரதம்
ரேகே, அவஸ்தி மற்றும் கோத்தாரி
ஆகிய பக்தர்கள் இதை உருவாக்கி அளித்தார்கள்.
குதிரை
பாபாவின் குதிரை சியாம்
சுந்தர். இது ஒரு குதிரை வண்டிக்காரனால்
பாபாவிற்க்கு பரிசாக அளிக்கப்பட்ட்து.
இந்த குதிரை வண்டிக்காரன் குதிரை வாங்கி விற்கும் தொழில் செய்தவர்.
மண்ணாலான புகைப்பான்கள்
பாபா புகைப் பிடிப்பதற்காக,
சுடாத மண்ணாலான களிமண் பைப்புகளை நாராயண் கும்பார் என்ற பக்தர் தினமும்
அளித்தார். இதை பாபா துனி நெருப்பில் வைத்து
சுட்டுக்கொள்வார். சில்லிம் தருவதற்காக
தினமும் நாராயண் கும்பாருக்கு நாலணாவை பாபா தருவார்.
பாபாவின் பாதுகை
லெண்டி பாக் போகும்போது போட்டுக்கொண்டு
நடப்பதற்காக யாரோ ஒரு பக்தர் பூனாவிலிருந்து வாங்கித்தந்த காலணியை பாபா
அணிவார். அதுவும் லெண்டிக்குப்
போகும்வரைதான். வந்த பிறாகு கழற்றி விட்டு
வெறும் காலோடுதான் இருப்பார்.
பாபா அமர்ந்திருக்கும் கல்
நாசிக்கைச் சேர்ந்த ராம்பாஜி என்பவரால்
இந்த புனிதக்கல் செய்து தரப்பட்ட்து.
மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தவர் ராம்பாஜி. பாபாவின் லீலைகளைக்க் கேட்டு சீரடிக்கு
வந்தார். பாபாவைத் தரிசித்த பிறாகு அவரது
மனநோய் குணமானது. பாபா குளிக்கும்போது
அவர் மீது பட்டி விழுகிற நீரை தீர்த்தமாகப்
பிடித்து அதைப் பருகுவதை வழக்கமாக வைத்திருந்தார் ராம்பாஜி. இதனால் விரைவாக அவர் குணமானார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, பாபா குளிப்பதற்க்கும் அமர்வதற்க்கும் ஏற்ற
வகையில் இந்த கல்லை செதுக்கிப் பரிசாக அளித்தார்.
மரப்படுக்கை
மகாசமாதிக்குப் பிறகு, பாபா
இதன் மீதுதான் கிட்த்தப்பட்டார்.
துவக்கத்தில் இது சாவடியின் மேற்குப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது மியூசியத்தில் உள்ளது.
வெற்றிலைப்பெட்டி
சகுண் மேரு நாயக்கின்
இல்லத்தில் இந்தப் பெட்டி பத்திரகாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கம்பளம்
சாது பையா, சோட்டு பையா, நாராயண் பையா ஆகியோரால் இது
பரிசளிக்கப்பட்டது.
பாபாவின் கப்னி
பாலா சிம்பி என்ற தையற்கலைஞர்
இதை அவருக்காக தைத்துக் கொடுப்பார்.
அவருக்கு நான்கு ரூபாய் தையற்கூலியாகத் தரப்படும். இதை மீண்டும் பாபா தடித்த நூல் கொண்டு
தைப்பார்.
இவற்றை சீரடி மியூசியத்தில்
காணலாம்.
No comments:
Post a Comment