பாபா
சொன்ன ஒரு கதையைக் கேளுங்கள். ‘ சஞ்சல
புத்தியுடைய ஒருவன் இருந்தான். அவனது
வீட்டில் தனம், தான்யங்கள்
மற்றும் பிற பொருட்கள் ஏராளமாக நிரம்பிக்கிடந்தன.
ஆயினும் அவன் உபாதிகளைத் தேடினான்.
அவசியமில்லாமல் தலை மேல் பாரத்தை ஏற்றிக் கொண்டு
இங்கும் அங்கும் அலைந்தான். அவன்
மனத்தில் அமைதியில்லை. ஒரு
நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான். உடனே
அதைத் தூக்கிக் கொள்வான். அவனால்
மனத்தை சலனமில்லாமல் செய்யமுடியவில்லை.
அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது.
நான் அவனிடம் சொன்னேன்.
‘உன் மனத்தை நிலை பெறச்செய்து ஏதாவது ஒன்றில்
நிறுத்து! அது எதுவாக இருக்கட்டும்.
நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய
மனத்தை ஏதாவது ஒன்றில் நிலை பெறச் செய்’
(அத்தியாயம் 35:115-120)
No comments:
Post a Comment