கோவிந்த் பல்ராம் மன்கர் என்பவர் ஒரு முறை ஷீரடிக்கு
செல்ல இருந்த சமயம், அங்குச் செல்லுமுன் திருமதி தாரகத் என்ற பக்தையை பார்க்கச்
சென்றார். பாபாவிற்கு அன்புடன் எதாவது கொடுத்து அனுப்ப எண்ணிய அந்த பக்தை வீடு
முழுதும் தேடி, எதுவும் கிடைக்காமல் இறுதியில், ஏற்கனவே நிவேதனம் செய்த பால்
பேடாவை கண்டவர், அதனை பாபா ஏற்பாரா மாட்டாரா என்று துளிக்கூட எண்ணாமல்,
பாபா மேல் கொண்ட அன்பினால், அதை பாபா ஏற்பார் என்று நம்பிக்கை கொண்டு பாபாவிடம்
கொடுக்குமாறு சொன்னார்.
கோவிந்த் பல்ராம்,
சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யச் செல்லு முன், பால் பேடா கொண்டு செல்ல மறந்து
விட்டார்.
சர்வமும்
அறிந்த பாபாவோ "எனக்கு என்ன கொண்டு வந்தாய்?" என்றார்.
கோவிந்த் " எதுவும் இல்லை" என்றார்.
மறுமுறை தரிசனம் செய்தபோதும், பாபா இதையே கேட்டார்.
கோவிந்தும் ஒரே பதிலை சொன்னார்.
பாபா உடனே அவரிடம் "தாரகத் எனக்கு
எதுவும் கொடுக்கவில்லையா ?' என்று கேட்ட போதுதான், அவருக்கு ஞாபகம் வந்து, அவரது தங்குமிடம் சென்று பேடாவை கொணர்ந்து
கொடுத்தார்.
பாபா அதனை மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டார்.
பக்தியுடனும்
அன்புடனும் அளிக்கும் தனது பக்தர்களின் காணிக்கையை அது எத்தகையது ஆயினும் ஏற்பார்
அந்த பெருமான்.
அந்த சற்குருவை வணங்கி சாய் ராம் என்று கூவி
நம்பி அவரைப் பணிவோம்.
ஜெய் ஜெய் சாய்ராம்.
No comments:
Post a Comment