Monday, October 7, 2013

குரு வழியில் நட!

ஒரு முறை பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனனும் தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள்.
பகவான் தனக்கு மேலே ஒரு பறவை பறப்பதை கவனித்து, “அர்ஜுனா, அதோ பறக்கிறதேஅது ஒரு புறாவைப் போலிருக்கிறது, அல்லவா?என்றார்.
“ஆம்! அது புறாதான்!என்றான் அர்ஜுனன்.
“இல்லை, அது ஒரு காகம் போலிருக்கிறது”  என பகவான் கூறினார்.  இப்போதும் அர்ஜுனன் ஆம் சுவாமி, அது காகம் தான்என்றான்.
மீண்டும் மேலே பார்த்த பகவான், “இல்லை அர்ஜுனா, அது ஒரு கழுகைப் போலிருக்கிறதுஎன்றார்.
“சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக அது ஒரு கழுகுதான் பகவான்!என உறுதியாகச் சொன்னான் அர்ஜுனன்.  
“என்ன நீ? நான் எதைச் சொன்னாலும், அதையே ஆமோதிக்கிறாய்! நீயாக ஏன் உறுதி செய்து சொல்ல மறுக்கிறாய்?எனக் கேட்டார் பகவான்.
“மன்னிக்க வேண்டும் சுவாமி! நீங்கள் காகத்தை கழுகாகவோ, புறாவாகவோ, வேறு எதுவாகவோ மாற்றுகிற சர்வ சக்தியுள்ள கடவுள், குரு.  இதை நான் மறுத்துப் பேசி வீணாக எதற்குத் தொல்லையை விலை கொடுத்து வாங்க வேண்டும்? குரு என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே நம்புவதுதான் ஒரு சிஷ்யனின் கடமை!என்றான் கிருஷ்ணன்.
இதே போன்ற நிகழ்வு சாயி பக்தர் ஒருவரது வாழ்விலும் நடந்திருக்கிறது, தொடர்ந்து படியுங்கள்.....


குஷா பாவ் என்பவர் ஒரு மிகச் சிறந்த சாயி பக்தர். வைதீக பிராமணக் குடும்பத்தினைச் சேர்ந்த அவர், தனது குருவான பாபா சாப்பிட்டுப் போடும் எச்சில் உணவினை எடுத்து விரும்பிச் சாப்பிடுவார். அவரை பாபா அடித்தாலும் திட்டினாலும் அதனை ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்வார்.
இப்படியிருக்கும் அவர் ஏகாதசி விரதத்தினை கடுமையாக அனுசரித்து வந்தார்.  அன்றைய தினத்தில் பிராமணர்கள் வெங்காயம் சேர்ப்பதில்லை என்பதால் அதையே அவரும் பின்பற்றி வந்தார்.
ஒருமுறை பாபா அவரிடம், “என்ன சாப்பிட்டீர்கள்?என்றார்.
“இன்று ஏகாதசி, எதுவும் சாப்பிடவில்லைஎன்றார் குஷாபாவ்.
இல்லை, நீங்கள் வெங்காயம் சாப்பிட்டீர்கள்என்று சொல்லி, சில வெங்காயங்களை எடுத்து அவர் கையில் கொடுத்து, “இதை கண்டிப்பாக நீங்கள் சாப்பிட்டே ஆகவேண்டும்என்றார் பாபா.
“பாபா, நீங்கள் சாப்பிட்டால் நிச்சயமாக நான் சாப்பிடுகிறேன்என்றார் குஷாபாவ்.
பாபா அதற்க்கு ஒப்புக்கொள்ள இருவரும் வெங்காயத்தை தின்றுக்கொண்டிருந்தனர்.  அப்போது சில பக்தர்கள் துவாரகமயிக்கு வந்தனர். அவர்களிடம் “இதோ பாருங்கள், வைதீக பிராமணரான இந்த நபர், ஏகாதசி தினமான இன்று வெங்காயத்தைச் சாப்பிடுகிறார்என்று பாபா குஷாபாவைச் சுட்டிக்காட்டினார்.
“தான் சாப்பிடுவதால், என்னையும் சாப்பிடச்சொன்னார், நான் சாப்பிடுகிறேன்என்று குஷாபாவ் கூறினார்.
அவர் இப்படிச் சொன்னதும், பாபா வாயிலிருந்து துப்பினார். வெங்காயத்திற்க்கு  பதில் அது உருளைக்கிழங்காக மாறியிருந்தது.  குஷாபாவ் சற்றும் தாமதிக்காமல், தரையில் விழுந்து இருந்த அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
அவர் இப்படிச் செய்தமைக்காக பாபா அவரை அடித்தார் பிறகு அவரை ஆசிர்வதித்து, நீ எப்போதும் என்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறாய்..கையை நீட்டு. இதிலிருந்து என் துனி உதி இனி வரும். இதனை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் நோய்கள், பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களை வாழ வைஎன்றார் பாபா.  குஷாபாவ் அப்படியே செய்து பாபாவின் அனுக்கிரத்தைப் பெற்றார். 

குரு அதாவது நமது சத்குரு என்ன கூறுகிறாரோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.  நமது வழியில் உண்மையைக்கூறுகிறேன் என்று நாம் நடந்துக்கொண்டால் நமது நடத்தையை பகவான் பொய்யாக்கிவிடுவார். இது பாபா பக்தர்கள் அனைவரது அனுபவம் ஆகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...