தர்கத்
என்ற குடும்பத்தினரின் அனுபவ பூர்வ விவரிப்பின்படி , நானாவலி என்று ஒரு
சாய் பக்தர் இருந்தார். அவர் பலவித சேஷ்டைகளும் செய்பவர். கோமாளிபோல் தோற்றமும்
நடவடிக்கையும் கொண்டவர். அவருக்கு ஹெர்னியா எனும் உடல் உபாதை இருந்ததால், அவர்
எப்போதும் உடலின் பின் புறம் வால் போல் ஆடையை சுத்தி இருப்பார். அதன் பொருட்டு
சிறிது கோணல் மாணலாக நடப்பார். வீதியில் அவர் நடந்தால் சிறுவர்கள் அவரை கேலி
செய்து துன்புறுத்துவர். அவரோ வெகுவேகமாய் சாயிடம் சரண் புகுவார். பணம் பொருள்
தேடி ஷீரடிக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கையை கேலி செய்வார். ஆயினும் ஸ்ரீ சாய்
பக்தியில் அனுமனுக்கு அவர் நிகராம்.
ஒருமுறை
பாபாவை தனது இருக்கையை விட்டு எழச் சொல்லி,
அதில் தான் அமர்ந்து எழுந்து, மீண்டும் பாபாவை இருக்கையில் அமரச் சொன்னார்.
பின்னர் "இந்த இருக்கையில் நீங்கள் ஒருவர் மட்டுமே அமர முடியும் நான் எப்பவும் உங்கள் காலடியில் அமரவே விரும்புகிறேன்” என்றார்.
பாபாவை இப்படி உரிமையுடன் எவரால் இருக்கையை விட்டு எழச் சொல்லமுடியும்? பாபாவும் தன் அன்பு பக்தருக்காக அடி பணிந்தாரே!
ஒருமுறை நானாவலி கவல்யாவை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
மசூதியின் உள் புகுந்ததும் தன் உருவத்தைச் சுருக்கி உத்தரத்திலிருந்து இறங்கும் கண்ணாடி விளக்கைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். இவ்வாறு உருவத்தைச் சுருக்க எவரால் இயலும் ஹனுமனை அன்றி?
பாபா மகா சமாதி அடைந்ததும் மிக்க துயரத்தில் ஆழ்ந்த நானாவலி பதி மூன்றாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ராம பக்தியில் ஸ்ரீ ஹனுமாருக்கு நிகராக ,சாய் ராம பக்தியில் பக்தி
செய்தல் என்பதற்கு இலக்கணமாக இருந்த நானாவலியின் வழியை நாமும் பின் பற்றுவோம் .சாயி
நாதர் அருள் பெற வேண்டின் அறிவுடையவராகவோ, செல்வம் உடையவராகவோ, பெரும் பதவியிலிருப்பவராகவோ, உருவ பொலிவு உடையவராகவோ, ஏன் மனித இனமாக மட்டுமே கூட இருத்தல் ஒரு தகுதி ஆகா. புழு, பூச்சி, பக்ஷி, மிருகம், போன்ற எல்லாவற்றையும் நேசிக்கக் கற்று கொடுத்த ஆசான் அல்லவா அவர்!
ஷீரடியில்
லேண்டி தோட்ட முகப்பில் இருக்கும் அந்த நானாவலி என்ற பக்தரின் சிலையை
வணங்குவோம்
சாய்
ராம் சாய் ராம் சாய்ராம்
No comments:
Post a Comment