Friday, October 25, 2013

பாம்பு - தவளை



சாயிராம் ஒருநாள் சொன்னார்.
      நான் நதிக் கரை அருகே சென்று கை கால்களை கழுவிக் கொண்டிருந்தேன். பிறகு குழாயை எடுத்துப் புகைக்கத் துவங்கினேன். அப்போது அங்கு ஒரு தவளை கத்தும் ஒலி கேட்டது.  அப்பொழுது அங்கு வந்த வழிப்போக்கன் அது என்ன சத்தம்?என்று கேட்டார்.
தவளையை பாம்பு விழுங்கப் பார்க்கிறது என்றேன்
தான் நேரில் சென்று பார்த்து வருவதாக சொன்னார்.  அங்கு போய் பார்த்து வந்தவர் "தவளையை பாம்பு விழுங்கிவிடும்" என்றார்
நான் அதை தடுப்பேன் என்றேன்
அங்கு சென்று “ஏய் வீர பத்ரப்பா! இன்னும் உன் பகை தீரவில்லையா?
பசப்பா தவளையாய் பிறந்தது போதாதா?  நீ மாற மாட்டாயா ?”  என்றேன்
பாம்பு உடனே தவளையை விட்டு விட்டது தவளை ஓடி மறைந்தது .
இதை பார்த்த வழி போக்கன் வியந்தார்.  அப்போது நான் அவர்களின் பூர்வ கதையை சொன்னேன்
          ஒரு சிவன் கோயில் பாழடைந்த நிலையில் இருந்த்து. அதனை சீர் செய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி அதற்க்காகப் பணம் திரட்டினர். கருமியும் பணக்காரருமான  ஒருவரிடம் அதைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தனர். அவரோ அந்தப் பெரும் பணத்தை தாமே எடுத்து வைத்துக்கொண்டார்.
          ஒரு நாள் சிவன்  அந்த கருமியின் மனைவியின் கனவில் வந்து
உன் கணவரின் செயலில் உனக்கு பொறுப்பு இருக்கிறதாகையால்,
நீ உன் பங்காக அந்தப் பணத்தை கொடு என்றார்.
                     அந்த பெண் தன் நகையை விற்று பணம் அளிக்க நினைத்த போது, அந்த கருமி,  அந்த நகைக்குரிய பணத்தை தான் கொடுப்பதாக சொல்லி குறைந்த விலைக்கு நகையினை மதிப்பீடு செய்தார்.
          மேலும் அந்த பணத்திற்கு ஈடாக நிலம் அளிப்பதாக சொன்னார்.
அந்த  நிலமும் துபாக்கி என்ற பெண்மணி அடமானம் வைத்தது. மேலும் விளைச்சல் இல்லா நிலத்தை அதிக விலைக்கு பூசாரியிடம் அளித்தார். இவ்வாறு மனைவியை, துபாக்கியை, பூசாரியை, கடவுளையும் ஏமாற்றினார். பின்னர் ஒருநாள் இடி தாக்கி இவர்கள் இறந்தனர்.

          மறுபிறவியில் அந்த கருமி பிராமண குலத்தில் பிறந்து வீர பத்ரப்ப என்று அழைக்கப்  பட்டார்.  அவரது மனைவியோ கோவில் பூசாரிக்குப் பிறந்து கௌரி என அழைக்கப் பட்டார். துபாக்கி ஒரு கோவில் பணியாளரின் வீட்டில் மகனாகப்  பிறந்து சென்னபசப்பா என்று அழைக்கப் பட்டார்.
         பாபா அந்த பூசாரியின் நண்பரானதால், பிக்ஷை கேட்டு அந்த ஊருக்கு வந்த வீரபத்ரப்பாவை, அவரது மகள் கௌரிக்கு மணமுடிக்க சொன்னார்.    ஆனால் இந்த பிறவியிலும் வீரபத்ரப்பாவின்  பணத்தாசை விடவில்லை.  திடீரென, தானமாக அளிக்கப்பட்ட அந்த நிலம் விலை ஏற்றம் கண்டது.  முன்  பிறவியில் கௌரி, கருமியின் மனைவியாக தன் நகைகளை விற்று அடைந்த நிலம் அது. அந்த நிலம் விஷயமாக வீரபத்ரப்பாவும் சென்ன பசப்பாவும் சண்டை இட்டனர்.
           பாவோ கௌரிக்குத்தான் அந்த நிலம் சொந்தம்  என்றும், அதனை வேறு எவருக்கும் அளிக்க வேண்டாம் என்றும் சொன்னார்.
          அதைக் கேட்ட வீரபத்ரப்பா  சென்ன  பசப்பாவை அடிக்க சென்றார்.
பாபாவின் காலில் விழுந்து தன்னை விரோதியிடமிருந்து காக்கும்படி சென்னபசப்பா கேட்டார்.  பாபாவும் தான் அவரை எப்போதும் விரோதியிடமிருந்து காப்பதாக சொன்னார்.
     அதே போன்று அடுத்த பிறவியில் பாம்பாக பிறந்த வீரபத்ரப்பாவிடமிருந்து தவளையாக பிறந்த சென்னபசப்பாவை பாபா காத்தாராம் என்ன அற்புதமான கருணை செயல் இது!
           எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எத்தகைய உரு எடுத்தாலும் பாபாவின் அருள் நம்மைக் காக்கும்.எடுத்த பிறவி யாவிலும் அந்த மகானின் ஆசி பெரும் தகுதியை பெறுமாறு பக்தியும் தூய உள்ளமும் ,கொண்டு பேராசை,பொறாமை,அகங்காரம் அற்ற நல வாழ்வே நாம் வாழ்தல் வேண்டும்.
           எப்பிறவியிலும் நம்மை காக்கும் சாயி அடி பணிதல் நமது பெரும் பேறன்றோ?   

            சாய்ராம்! சாய்ராம்! சாய்ராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...