சாயி பாபாவின் மகிமை!
சின்ன கிருஷ்ணராஜா சாகேப் என்ற
பக்தர் சீரடிக்குச் சென்றிருந்தார்.
பிற்பகலில் தன்னை வந்து சந்திக்குமாறு அவரிடம் பாபா கூறியிருந்ததால்,
பிற்பகல் நேரத்தில் மசூதிக்கு வந்தார்.
அவரை அழைத்து வந்த நபரை வெளியே
அனுப்பிவிட்டு, பாபா அவரைத் தழுவிக்கொண்டு, உனக்கு எது வேண்டுமோ கேள்....மாதம்
ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எது வேண்டுமோ கேள்...எதுவாயினும் நான் உனக்குத்
தருகிறேன் என்றார் பாபா.
பாபா தனது ஆசையைத் தூண்டுகிறார்
என நினைத்த ராஜா சாகேப், எனக்கு எது நல்லதோ, உபயோகமானதோ அதனை சாயி பாபா
அறிவார். ஆகவே, கொடுப்பதோ, கொடுக்காமல்
இருப்பதோ அவரே தீர்மானிக்க வேண்டும். நான் கேட்க வேண்டியது இல்லை என நினைத்து
தயங்கியவாறு நின்றார்.
பாபா அவரை விடவில்லை. ஏதாவது கேட்டு வாங்கியாக வேண்டும் என
கெஞ்சினார்.
”பாபா, நான் எதைக்
கேட்டாலும் தருவீர்கள் என்பது உறுதிதானே?” என சாகேப் கேட்டார்.
”ஆம், நிச்சயமாக!” என்ற பாபாவிடம், “அப்படியானால் இந்தப் பிறவியிலும், இனி நான் எடுக்க நேரிடும்
பிறவிகளிலும் தாங்கள் என்னை விட்டு பிரியாமல் இருக்கவேண்டும் என்பதே என்
பிரார்த்தனை” என்றார் சாகேப்.
பாபா அவரை தட்டிக் கொடுத்தவாறு,
“ஆம்! எப்படி இருப்பினும் என்ன செய்கினும் நான் உன்னுடன் இருப்பேன்.... உன்
உள்ளும் இருப்பேன், புறத்திலும் இருப்பேன்” என்று கூறினார்.
இதுதான்
சாயி பாபாவின் மகிமை.
No comments:
Post a Comment