தோபேச்வர் என்னும் ஊரைச் சேர்ந்த ரகுநாத் (1821 - 1910) ஒரு சித்தர். 'காகா புராணிக்” என்ற பெயரால் நன்கு
அறியப்பட்டவர். பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் டாக்டர் பண்டித்துக்கு அவருடைய சேவடிகளில்
ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகிவிட்டார்.
பண்டித்
தம் குரு காகாவைக் கூவி அழைத்தார். அதனால் ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில்
இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பெருக்கு அன்றோ.
இருந்தபோதிலும்,
பூஜைச் சடங்குகள் எல்லாம் பாபா விரும்பியபோதுதான்
அனுமதிக்கப்பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரஸிம்ஹ
அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை
திரவியங்களையெல்லாம் விசிறி அடித்துவிடுவார்.
நரஸிம்ஹ
அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று ஓடிவிடுவர்.
சிலசமயங்களில்
திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள்மீது
காட்டுவார். மற்றசமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும்
மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார்.
சில நேரங்களில் காலாக்கினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சிலசமயங்களில் வெண்ணெயைவிட இளகியவராக உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.
வெளிப்பார்வைக்குக் கோபத்தால் அவர் நடுங்கலாம்; கண்விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்குக் குழந்தையின்மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.

அடுத்த
கணமே தம்முடைய சுய சாந்திநிலையை மீண்டும் அடைந்து பக்தர்களைத் தம்மிடம் வருமாறு
உரக்க அழைப்பார், ''நான் யார்மீதாவது கோபப்படுவது போலத்
தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.-- தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று
திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி
இன்னல் செய்வேன். நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை
தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள்
கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.”
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment