பிரார்த்தனை
அப்பாவியானவன் தனது அப்பாவித்தனத்திலிருந்து வெளியே வர
வேண்டும். தனது ஒவ்வொரு எண்ணத்தையும், செயலையும் நன்கு ஆராய வேண்டும். இதற்க்கு புத்தி நன்கு வேலை
செய்யவேண்டும். இந்த புத்தி வேலை செய்ய
பாபாவிடம் பிரார்த்திக்கவேண்டும்.
பாபாவிடம் ஒவ்வொரு முறையும் கேட்கவேண்டும்.
பிரார்த்தனை என்பது கேட்பதுதான். “பாபா எனது இந்தசெயல் அப்பாவித்தனமாய்
உள்ளது. நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்க வேண்டும்.
இந்தப்பிரார்த்தனையை நம்பிக்கையோடும், பொறுமையோடும்
செய்ய வேண்டும். பாபா நிச்சயம் வழி
காட்டுவார். புத்தியில் தெளிவைதருவார்.
பாபா நல்லவர்களை கைவிடமாட்டார்.
கெட்டவர்களை கெடுக்கமாட்டார்.
மாறாக, கெட்டவர்களை நல்வழிப்படுத்துவார்.
தாமு அண்ணா ஒரு வியாபாரி. பெரும் பணக்கார்ர். அகமத் நகரைச் சேர்ந்தவர். பாபாவின் பக்தர். சீரடியில் ராமநவமி திருவிழாவின் போது
அலங்காரக்கொடி கொடுத்தார். அன்னதானம்
செய்தார்.
தாமு, பஞ்சு வியாபாரம் செய்தால் பல லட்சம் லாபம் வரும்
என தரகர் மூலம் அறிந்தார். சுமார் நூறு
ஆண்டுகட்கு முன் லட்சம் என்பது இன்றைய பல கோடிகட்கு சமம். ஆனாலும் இதில் ஈடுபட அவருக்கு குழப்பம். எனவே
பாபாவிற்க்கு கடிதம் எழுதினார்.
கடித்த்தினை ஷாமா படித்தார். உடனே பாபா, “தாமுவிற்க்கு தற்போது தேவை ஒன்றும்
இல்லையே, இருப்பதைக்கொண்டு திருப்தி அடையவேண்டியதுதானே, இந்த வியாபாரம் வேண்டாம்
என்று எழுது” என்றார்.
தாமு பாபாவின் பதிலைக்கண்டு தான் பாபாவைக் கலந்த்து
தப்பு என்று எண்ணினார். மனம் அலை பாய்ந்த்து. ஆனால் பாபாவிடம் நேராக கேட்க தைரியம் இல்லை.
மனதிற்குள்ளே இந்த வியாபார லாபத்தில் பாபாவுக்கும் பங்கு தர திட்டமிட்டார். பாபா அவரது மனதினைப் படித்து தனக்கு
அதிலெல்லாம் ஆர்வமில்லை என்றார். தாமு
அண்ணா சோர்ந்து அவ்வியாபாரத்தைக் கைவிட்டார்.
இன்னொரு முறை தானிய வியாபாரம் செய்தால் தனக்கு நல்ல
லாபம் வரும் என்று எண்ணினார். பாபாவிடம் கேட்ட போது பாபா அதனையும் வேண்டாம் என்று
சொல்லிவிட்டார்.
பாபா சொன்னபின் பஞ்சும் தானியமும் விலையேறின. தாமு அண்ணா, பாபா தப்பாக சொல்லிவிட்டாரோ என
எண்ணினார்.
பாபாவின் வார்த்தைகள் என்றும் பொய்ப்பது இல்லை.
விலையேறிய சில நாட்களில் பஞ்சும் தானியமும் விலையில் கடும் சரிவினைச்
சந்தித்தன. பாபாவின் வார்த்தைகள் தாமு
அண்ணாவை பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றின.
எல்லாம் நான்தான் செய்கிறேன் என எண்ணாமல் ஒவ்வொரு
முறையும் பாபாவைக் கலந்தால் அவர் நிச்சயம் நஷ்டத்தினை தடுத்துவிடுவார். அது
மட்டுமல்ல, இருப்பதைக்கொண்டு திருப்தியடையவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment