அழியக்கூடிய மனித உடலை ஏற்றுக்கொண்ட நிலையிலும்,
அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின்மேல் பற்றேதும் இல்லை.
வெளிப்பார்வைக்கு உடல் இருந்தாரே தவிர, அகமுகமாக உடன்மீது
பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்கமுடிந்தால், அவருக்கு அந்த ஜன்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும்.
உணவுண்ணும்போதும்
நீரருந்தும்போதும் தூங்கும்போதும் ஸாயீயையேஇடைவிடாது ஞாபகப்படுத்திக்கொண்டு, ஸாயீ வழிபாட்டையே தெய்வ
வழிபாடாகக் கொண்டவர்களான சிர்டீ மக்கள் புண்ணியசாலிகள்.
கொட்டிலும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் உரலே
தானியத்தைக் குற்றும்போதும் ஏந்திரத்தில் மாவு அரைக்கும்போதும் தயிர்
கடையும்போதும் அவர்களை பாபாவின் மஹிமையைப் பாடச்செய்யும்
பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை.
சாவகாசமாக உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் சாப்பிடும்போதும்
தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில்
தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் அவர்கள்
வழிபடவில்லை.
ஓ, சிர்டீயின் மகளிர் பாபாவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்.
அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானது. இம்மாதிரியான
தூய அன்புதான், மகிழ்ச்சிதரும் பாட்டுகளைக் கவனம் செய்வதற்குண்டான
(இயற்றுவதற்குண்டான) உணர்வை ஊட்டுகிறது; பாண்டித்தியம் இங்கே
செல்லாது.
மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின்
சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக
வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரஸிக்கும்படியாக
இருந்தது. உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு
அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும்.
ஸாயீபாபா விரும்பினால், சிர்டீயின் மகளிர் பாடிய எல்லாப்
பாட்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால்
செய்யமுடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை
நிறைவேறும்.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment