இவர்தான் சாயிபாபா!
கோதாவரி நதி தீரம்
கோமகன் சாயி அவதாரம்
ஈறாறு வயது பாலகனாய்
இறைதூதர் வந்தார்
சேவகனாய்
சீரடி என்ற
கிராமத்தில்
சீரிலா பாதை ஓரத்தில்
செழிப்பாய் நின்ற
வேப்பமரம்
சென்றே அமர்ந்தார்
யோகத்தில்
காற்றும் பனியும்
கடும் வெப்பம்
கண்டும் அவர்
எழவில்லை
கனவு கொண்ட அன்னையராம்
காத்தே நின்றார்
இறைமகனை
புரியா மனிதரின் மதபேதத்தினால்
புனிதர் சென்றார்
பாழ் மசூதியிலே
நீரை ஊற்றி
விளக்கெரித்தார்
நீண்ட கப்னி உடை
தரித்தார்
துனியெனும் தீயினை
வளர்த்தார்
தூய்மையாம் உதியை
நமக்களித்தார்
துவாரகமாயி என
அழைத்தார்
தூதன் நான் எனத்
தானுரைத்தார்
பிச்சை எடுத்த
உணவினையே
பிரித்தே அளித்தார்
யாவருக்கும்
தட்சணை கேட்டு
வாங்கியதை
தகுதிக் கேற்ப அளித்தாரே!
அகந்தை ஆணவ மனநிலையை
அழித்தார் தனது
சேவையினால்
அல்லா மாலிக்
எனுமுரையால்
அளித்தார் வாழ்வை
நெறிமுறையாய்
எல்லா மக்களும்
ஒன்றென்றார்
ஒன்றே தெய்வம் எனப் பகன்றார்
பொறுமை சகிப்பு கொள்
என்றார்
பொல்லா மனநிலை தனை
வென்றார்
என்றும் சாயியை நாம்
துதிப்போம்
எல்லா உயிர்க்கும்
உணவளிப்போம்
பிறவிப் பிணிகளை நாம்
துடைப்போம்
பேரின்ப உலகினை நாம்
படைப்போம்
-
கே.
கோதண்டபாணி
No comments:
Post a Comment