காகா மகாஜனியின் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் உருவ வழி பாட்டிலோ, தனி மனித வழிபாட்டிலோ நம்பிக்கை
அற்றவர். ஒரு ஆர்வம் காரணமாய் சாயியை தரிசிக்க விழைந்தார். ஆனால் அவரை வணங்கவோ அவருக்கு தட்சிணை கொடுக்கவோ சம்மதியேன் என்றார்.. இவர்கள் இருவரும் சீரடியை அடைந்தனர்.
பாபா இவரை நோக்கி "வாருங்கள் ஐயா"
என்றாராம். அந்தக் குரல் இவரது நண்பரின் தந்தையின் குரல் போலவே ஒலிக்கவே, நண்பர் உடனே பாபாவின் கால்களில் வீழ்ந்து
வணங்கினார். காலையிலும் மதியமும் பாபாவை தரிசித்தனர். இரு முறையும் பாபா காகாவிடம் தட்சிணை கேட்டார். காகாவிடம் தட்சிணை கேட்ட நீங்கள் என்னிடன் ஏன் கேட்கவில்லை என்று பாபாவிடமே அவர் கேட்டார்.
"நீ கொடுக்க விரும்பவில்லை. . அதனால் உன்னிடன் நான் கேட்கவில்லை. இப்போது கொடுக்கிறாயா?” என்றார் பாபா. அவர் காகா அளித்த அதே பதினேழு ரூபாயை அளித்தார். பாபா அவர்களை ஆசிர்வதித்து பிறகு இவ்வாறு சொன்னார்.
"நான் எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் பெற்றால் அதை பத்து மடங்காய் திருப்பித்தருவேன். யாரிடமிருந்து பெற வேண்டும் என்பதை அந்த இறைவன் தீர்மானிப்பார் நீங்கள் ஏற்கனவே கடன் பட்டிருந்தால் அதை திருப்பித் தருகிறீர்கள் செல்வம் தருமம் செய்ய பயன் பட வேண்டும். சொந்த சுகத்திற்காக உபயோகிக்க கூடாது. நீங்கள் கொடுத்தால்தான் உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும். கொடுப்பதன் மூலம் வைராக்கியம், பக்தி,ஞானம் வளரும்."
ஜெய் சாய்ராம்
No comments:
Post a Comment