Wednesday, October 23, 2013

உபநிஷத் தத்துவம்


         தாஸ்கனு என்ற பக்தர்  பல நூலகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
ஆயினும் ஈஷா உபநிஷத்தை மராத்தியில் மொழி பெயர்க்கும்போது 
பல ஐயங்கள் அவருக்கு வந்தது.
          இதன் காரணமாக பாபாவைச் சரணடைந்தபோது அவர் " காகாசாஹிப் தீட்சித் வீட்டு வேலைக்காரி,  உனக்கு விடை அளிப்பாள்" என்றார்.
 
         அதைக் கேட்ட அனைவரும் பாபா குறும்பு செய்வதாக நினைத்தனர்.  ஆனால் தாஸ்கனு அவ்வாறு எண்ணாமல், பாபாவின் வார்த்தைக்கேற்ப  தீட்சித் வீட்டிற்கு சென்றார்.
          அங்கு சென்றதும் அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமி அழகாக பாடுவதை கேட்டார்.
                       "கருஞ்சிவப்பு வண்ணப் புடவை....அழகான பூக்கள் பின்ன, வண்ணக் கரைகள் மின்ன கண்ணைக் கவர்கிறதே" என்பது அந்த பாடலின் பொருள்.
         பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாலும், மகிழ்வுடன் பாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி அணிந்திருந்ததோ ஒரு கந்தல் ஆடை.
மறுநாள் ராவ் பகதூர் தாஸ்கனுவிற்கு வேஷ்டி வாங்கி கொடுத்தார்.
அந்த சிறுமிக்கும் ஒரு புடவை வாங்க வேண்டுமென தாஸ்கனு வேண்டினார்.

        மறுநாள் அந்த புடவையில் வந்த சிறுமி அழகாக பாடி ஆடினாள்.
அதற்கு அடுத்த நாள் மீண்டும் பழைய கந்தல் ஆடையில் வந்தாள்.
அப்பொழுதும் அதே மகிழ்ச்சியுடன் பாடினாள். தாஸ்கனு உடனே ஈஷா உபநிஷத தத்துவத்தை உணர்ந்தாராம்.
                    "ஒருவரது மன நிலையைப் பொறுத்தே அவரவரது இன்ப துன்பம் அமைகிறது" என்று உணர்ந்தாராம். புற நிலைகள் வேறானாலும் மனமோ மகிழ்வுடன் இருத்தல் வேண்டும் என்பதை அறிந்தாராம்.

        மிகப் பெரிய தத்துவத்தையும் எளிதாக உணர்த்த,  அந்த சாய் சமர்த்தரைத் தவிர யாரால் இயலும் என்பதை நாம் அறிந்து சாய் ராமை வணங்குவோம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...