பக்தர்கள்
அன்புடன் அழைத்தால் தவறாமல் வருவார் சாயி ராம். ஆனால் அவர் எந்த
உருவிலும் வருவார். இதை அறிந்து கொண்டால் மட்டுமே அவர் வருகையை உணர முடியும்.
ஹேமட்பந்த் மிகச் சிறந்த சாய் பக்தர் அல்லவா? எனவே ஒரு முறை அவர் கனவில் சாய் வந்தார். உன்
வீட்டில் உணவருந்த வருகிறேன் என்றார். அன்று பவுர்ணமி தினம் .ஹோலி பண்டிகை.
அவர் தன் மனைவியிடம் கனவை சொன்ன போது, அவர் மனைவியோ நம்பிக்கை இன்றி பலவித நிவேதனங்கள் படைக்கப்படும் துவாரக மாயியை விட்டு எளிய உணவு உண்ண நம் வீட்டுக்கு எங்கே வருவார் என்றார்.

இருப்பினும்
உணவருந்தும் நேரம் வந்ததும் வீட்டிலுள்ளவர்களோடு ஒரு தனி இலை விரித்து விருந்தினர்
அல்லது அதிதிக்கு என்று பதார்த்தங்கள்
பரிமாறப்பட்டன.
அனைவரும்
மந்திரம் சொல்லி இலையை சுத்தி செய்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தனர். இலைகளில் நெய் பரிமாறினர்.
அந்த நேரம் காலடி ஓசை கேட்டதை ஹேமட்பந்த் உணர்ந்தார். உடனே ஹேமட்பந்த் எழுந்து விரைந்தார்.

கதவைத்திறந்ததும்
"உணவருந்தும் நேரம் பாதியில் எழுந்து வந்தீர் போலும். நாங்கள் அலி முகமத் , மௌலானா இஸ்மு முஜவர்.
உங்களிடம் சமர்பிக்க ஒன்று உள்ளது. அதை பெற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பின்னணியை பிறகு வந்து கூறுகிறோம்" என்றனர்.

அவர்கள்
அளித்த பொட்டலத்தில் சாயியின் திரு உருவ படம் இருந்தததைப் பார்த்த, ஹேமட்பந்த்
மெய் சிலிர்த்து கண்ணீர் சொரிந்தார்.
சாயியே உணவருந்த வந்து விட்டார் என்று அறிந்த அவர், அந்த திரு உருவ படத்தை பரிமாறப்பட்ட இலையின் முன் வைத்து வணங்கி அதன்பின் அனைவரும் உணவருந்தினர்.

அன்புடன் பக்தியுடன் அழைத்தால் வருவார்
அந்த சாய் நாதர்
வருவார் என்ற நம்பிக்கையும் வைத்திடல் வேண்டும்
எவ்வுருவிலும் வருவார் என்றும் அதை உணர தூய பக்தியும் வேண்டும்.
அவரை வணங்கி அவரையே நினைத்து இருத்தல் நம் பாக்கியம் அன்றோ

No comments:
Post a Comment