சென்னையிலிருந்து விஜயானந்த் என்ற ஒரு சந்நியாசி
மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பினார், அவ்வாறு அவர் செல்லும் வழியில்
பாபாவின் பெருமைகளை கேள்விப்பட்டு ஷீரடியில் இறங்கினார்.
சோம்தேவ் சுவாமிஜி என்பவரிடம் மான சரோவர் யாத்திரைக்கான வழிகளை கேட்டார். அவரோ அது மிகவும் குளிர் மிகுந்த பகுதி, மேலும் பல மொழிகளை பேசுவோர் உள்ளனர். மேலும் அது ஒரு மிகக் கடினமான பயணம் என்று கூறினார்.
சோம்தேவ் சுவாமிஜி என்பவரிடம் மான சரோவர் யாத்திரைக்கான வழிகளை கேட்டார். அவரோ அது மிகவும் குளிர் மிகுந்த பகுதி, மேலும் பல மொழிகளை பேசுவோர் உள்ளனர். மேலும் அது ஒரு மிகக் கடினமான பயணம் என்று கூறினார்.
இதனால் விஜயானந்த் தனது பயணத்தை ரத்து செய்து
விட்டார். பின்னர் பாபாவை தரிசிக்கச் சென்றார்.
"இந்த சந்நியாசி இங்கு
எதற்கு வந்தார்?" என்று பாபா கடிந்து கொண்டார். (பாபாவின் கோபம்,சாந்தம், இன்மொழிகள், கடிந்துகொள்ளல் யாவைக்குமான காரணங்கள்
அவர் மட்டுமே அறிந்தவை)
மனம் வருந்தினாலும் அந்த சந்நியாசி பாபா
தரிசனத்திலே இரண்டு நாட்கள் கழித்தார்.
பிறகு "தாயார் உடல் நிலை சீர் கெட்டு
விட்டது" என்ற ஒரு தகவலுடன் வந்த தந்தியை பாபாவிடம் காட்டி ஊர் திரும்ப
சம்மதம் கேட்டபோது, அதற்க்கு பாபா அவரிடம் "தாயாரிடம் பாசம் இருப்பவர் எதற்கு
சந்நியாசி ஆக வேண்டும்? பந்த பாசங்களை ஒழித்து இறைவனின் அடி
பணிவதல்லவோ சன்யாசிக்கு அழகு?”
என்றார்.
பின்னர் " உன் குடியிருப்பில் சென்று அமைதியாக
அமர். பாகவதம் மூன்று முறை படித்து முடி. ஆசைகளை விட்டொழி. ஹரியை சரணடை"
என்றார். மேலும் அவரது இறுதி நெருங்கி விட்டதை அறிந்த பாபா "ஸ்ரீ ராமா
விஜயமும் " படிக்கப் பணித்தார்.
லேண்டி தோட்டத்தில் அமர்ந்து பாகவதம் படிக்க
ஆரம்பித்தவர் களைப்படைந்து, அங்கிருந்து பாபாவிடம் வந்தவர், அவர் மடியிலேயே உயிர்
நீத்தார். என்ன ஒரு பேரின்பம்! என்ன ஒரு
பாக்கியம்! பெரும் பேறன்றோ !
வேறு
பாதையில் செல்ல இருந்தவரிடமும்,தன்
திருஷ்டியை செலுத்தி தம்மிடம் வர வைத்து முக்தி அளித்தாரே! பாபாவை சரணடைந்தால்
எத்தகைய பேறும் அவரருளால் நமக்கு
கிட்டும் என்று உணர்த்தும் இச் சரிதத்தைப் படித்துப் பயனடைவோம்!
சாய் ராம்! சாய் ராம்! சாய்ராம்!
No comments:
Post a Comment