சாய்
நாதர் தினமும் வீடு வீடாகச் சென்று உணவு பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதிலும் குறிப்பாக ஐந்து வீடுகளுக்கு செல்வார்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏன் இந்த நிலை என்று பலர் வியந்தனர். அவர் நினைத்தால் உலகுக்கே உணவு படைக்கலாமே எனவும் பேசினார். சந்ததி, செல்வம், புகழைத் துறந்தவர் என்றும் யாசித்தே உணவு பெருவர்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏன் இந்த நிலை என்று பலர் வியந்தனர். அவர் நினைத்தால் உலகுக்கே உணவு படைக்கலாமே எனவும் பேசினார். சந்ததி, செல்வம், புகழைத் துறந்தவர் என்றும் யாசித்தே உணவு பெருவர்.
ஏனெனில் சன்யாசிகள் அவர்களுக்கு என்று எதுவும் இல்லாத நிலையில் யாசித்தே உணவு பெருவர். அவர்களுக்கு உணவு
அளிப்பது சம்சாரியின் கடமை என சாத்திரம் சொல்கிறது.
ஆயினும்
சாய் ஒரு சந்நியாசி அல்லவே ! மேலும் அவர் சம்சாரியும் அன்று! அவருக்கு உலகே
வீடு. உலகோரைக் காப்பதுவே அவர் செயல். எனவே அவர்
செய்யும் எந்த ஒரு செயலையும் விமர்சிக்க இயலாது மற்றும் அவர்
மக்களை பாவச் சுமையிலிருந்து காக்கவே பிச்சைப் பாத்திரம் சுமந்தவர்.
சரி,
இது ஏன், எவ்வாறு என்று அறிவோமா ?
உணவு
தயாரிக்கையில் , அதாவது கழுவுவது, இடிப்பது, அரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பல
கிருமிகளையும், ஜந்துக்களையும் நாம் கொல்ல நேரிடுகிறது. அதனால் ஏற்படும் பாவச் சுமைகளுக்குப் பரிகாரத்தினையும்
சாத்திரம் சொல்கிறது. பிரம்மனுக்கோ, தேவருக்கோ, வேதத்திற்கோ , பித்ருக்களுக்கோ அல்லது வீடு தேடி வரும் அதிதிக்கோ உணவிட்டால் பாவ விமோசனம் கிடைக்கும்
என்றும் சொல்கிறது.
சாய்ராம்
அவ்வாறு பிச்சை கேட்டுச் சென்றதன் மூலம் மக்களை பாவத்திலிருந்து காத்து, அவர் தம்
பாவத்தினை அவரே இரந்து பெற்றார். இதன் மூலம் நாம் எல்லோரும் உணர வேண்டியது, 'இல்லார்க்கும்
வறியவர்க்கும் உணவிட வேண்டியது நம் கடமை மட்டுமின்றி, அச்செயல் நம் பாவச் சுமையையும்
குறைக்கும்' என்பதுவே.
No comments:
Post a Comment