பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று
பெயர்கொண்ட தீவிர ஸாயீபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால்
பாபாவுக்கு சேவை செய்தவர் அவர். ஷீரடி கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற
லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர்
செய்துவந்தார்.
அவருக்குப் பிறகு அந்த ஸேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயீ என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவருக்குப் பிறகு அந்த ஸேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயீ என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில்
பிறந்தவராயினும், 'இந்த ஈனமான வேலையை
நான் செய்வது தகாது’ என்னும்
முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.
விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய சேவை போற்றுதற்குரியது.
விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய சேவை போற்றுதற்குரியது.
பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல்
ஏற்றுக்கொண்டார்.
சாயி சத்சரித்திரத்திலிருந்து.........
No comments:
Post a Comment