சாயி பக்தர் காகா
மகாஜனியின் முதலாளியான தரம்ஸீ சேட் பற்றி பாபா சொன்ன கதை. தரம்ஸீ
சேட்டுக்கு எல்லாவிதச் செல்வமும் கவுரவமும் புகழும் இருந்தும் மனத்தில் அமைதி
இல்லை. துக்கங்களையும், இன்னல்களையும்
கற்பனை செய்து கொண்டு சதா கவலையில் மூழ்கி விடுவார் என்று சத்சரித்திரம் கூறுகிறது.
தரம்ஸீசேட்டுக்கு
மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் இப்படித்தான் எந்தப் பிரச்சனையும், நோயும், துன்பமும்
இல்லாதபோதும், ஏதோ இனம் புரியாத பிரச்சனை இருப்பதைப் போன்று
நினைத்துக்கொண்டு சதா துன்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன தெரியுமா?
நமக்கு இருக்கிற
சஞ்சல புத்தி!
சஞ்சல புத்தி என்பது அவநம்பிக்கையின் தோழன்! குறிக்கோள்
இல்லாத வழிகாட்டி! நிலையற்ற மனத்தின் அடையாளம். இந்த புத்தியிருக்கிற
வரை நாம் எதையும் நோக்கி பயணிக்க முடியாது, சாதிக்கவும் முடியாது!
சஞ்சல புத்தியுள்ளவன் இரண்டு குதிரைகளில் இரண்டு கால்களை வைத்து
பயணம் செய்பவனுக்கு ஒப்பானவன். இவனால் எந்தக்
காலத்திலும் நிம்மதியாக வாழ முடியாது.
No comments:
Post a Comment