ராம்கிர்புவா என்பவர் பாபாவின் பக்தர். அவர்
பாபாவைத் தரிசித்த பின், தனது ஊர் திரும்ப விரும்பினார். பாபா அவரை ஜாம்நேரில் தங்கி, பின் பயணத்தை தொடர
சொன்னார். ராம்கிர்புவா தன்னிடம் அவ்வாறு
செல்ல போதிய பணம் இல்லை, ஜல்காவ்ம் வரைதான் செல்ல இயலும் என்றார்.
பாபா அவரிடம் "அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் நீ செல். ஜாம்நேரில் என் பக்தன் சாண்டோர்கரின் மகள் மைனாதாய் பிரசவ வலியில் தவிக்கிறார். ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த உதியையும் ஆரத்தி பாடலையும் அவரிடம் கொடு" என்றார்.
ஜல்காவில்
இறங்கியபோது ராம்கிர்புவா இரண்டு அணாக்கள் மட்டுமே தன்வசம் வைத்திருந்தார். அவருக்கு ஆறுதல் தரும் வகையில் ”இங்கு
ராம்கிர்புவா யார்?" என ஒருவர் கேட்டார்.
”உங்களுக்கு நானா
அவர்கள் குதிரை பூட்டிய ஜட்கா அனுப்பியுள்ளார். அழைத்து வர சொன்னார்” என்றார்.
வண்டியில் பயணம் செய்தபோது வழியில் சுனை ஒன்றை
கண்டதும் வண்டி ஓட்டி ஜட்காவை நிறுத்தி, ராம்கிர்புவாவிற்கு
உண்ண பழங்களை அளித்தார்.
வண்டி
ஒட்டி முஸ்லிம் போல தோற்றமளிக்கவே அவர் அதை உண்ண தயங்கினார். வண்டி ஒட்டி
"நான் இந்துதான். தயங்காமல் அருந்துங்கள்" என்றார்.
விடியும் நேரம் வண்டி ஜாம்நேரை நெருகிய
போது ராம்கிர் இயற்கை உபாதை கழிக்க வண்டியை நிறுத்தச் சொன்னார். முடிந்ததும் திரும்பினால் ஜட்காவையும் வண்டி ஓட்டியையும் காணாமல்
ஆச்சர்யம் அடைந்தார்.
ஒரு வழியாக வழி விசாரித்து சாண்ட்தோர்கர் வீட்டை ராம்கிர்புவா அடைந்தார். பாபாவின் உதியை அளித்ததும், சாண்ட்டோர்கர் மகளுக்கு அதை இட்டார். பிரசவம் நல்ல முறையில் முடிந்ததும், ராம்கிர் தன்னை அழைத்து வர வண்டி அனுப்பியதற்கு சாண்ட்டோர்கரிடம் நன்றி தெரிவித்தார். சாண்ட்டோர்கரோ அப்படி தாம் வண்டி ஏதும் அனுப்பவில்லையே என்று வியந்தாராம்
பாபாவின் மகிமையையும் உதியின் மகிமையையும் அறிந்தவர்க்கு வண்டி ஒட்டி யார் என்று தெரியாதா? பக்தருக்காக எதையும் செய்வாரே அந்த சித்தர்!

ஜெய் சாய்ராம்!
No comments:
Post a Comment