Sunday, October 27, 2013

ஸாயி மூர்த்தி


      கி.பி. 1681ஆம் ஆண்டு ஞானி ராமதாஸர் ஸமாதியடைந்தார். அதிலி­ருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார். 
     பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது; ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பக்திமார்க்கம் படிப்படியாக நசித்துப்போயிற்று; மக்கள் அறவழியி­ருந்து புரண்டனர்.
 அந்த சமயத்தில் ஞானி ராமதாஸர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்ஜியத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களி­ருந்து அவர் காப்பாற்றினார். 
     இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளேயே மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவைச் சரிக்கட்ட முயன்றார்.
 
   ராமனும் ரஹீமும் ஒன்றே; அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும்? ஒருவரையொருவர் ஏன் வெறுக்க வேண்டும்? 
      ! என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்! நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றுசேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தரும சிந்தனையும் உங்களுடைய மனத்தில் ஆழமாக வேர்விடட்டும்.  வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய க்ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும். ஸ்ரீஹரி நம்மைக் காப்பார். 
   யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண். 
     ''யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் (எதிரடி) செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும். இதுதான் பாபாவின் உபதேச சாரம். 
      ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்துக்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் இந்த உபதேசம் நன்மையளிக்கக்கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர், பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம். 
      கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார். 
     எவர் 'இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயைஃ என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்கப் பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார். சிஷ்யர்களின் உலக பந்தங்களைக் கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டுவிட வைப்பது என்பதுபற்றியே பாபா இரவுபகலாகச் சிந்தித்தார். 
      'யானும் இறைவனும் ஒன்றே என்னும் பாவமும் அகண்டமான ஆனந்தநிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப ஸமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும் துறவும் அடைக்கலம் புகுந்தன. 
வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடுவீடாக அலைந்து கைநீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது.
 
      மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை எத்தனையோ. தாங்களே அதர்மநெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமநெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை ஸம்ஸாரக் கடலைத் தாண்டவைத்து, ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலை பெற்றுத்தர முடியும்?
 

      தம்முடைய தருமநெறிப் பெருமையை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றிபெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக ஸாயீ விளங்கினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...