Monday, October 28, 2013

இறைவனால் நியமிக்கப்பட்டவர்


     தேஹாபிமானத்திற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின்மீது அத்தியந்தமான பிரீதியைச் செலுத்தும் மாண்புடையவர் இந்த ஸாயீ.   குருமார்களில் இரண்டு வகையுண்டு; 'நியத (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநியத (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்). இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்கம் செய்கிறேன். 
    நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப்படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்க்கத்தில் வழிநடத்துவதற்கு உண்டான வரப்பிரஸாதத்தை மாத்திரம் உடையவர் 'அநியத குரு. 
      ஆனால், 'நியத குருவினுடைய சம்பந்தமோ, துவைத பா(ஆஏஅ)வத்தை அழித்து, 'தத்வமஸி (நீயே அதுவாக இருக்கிறாய்) என்னும் ஸாமவேத மஹாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது. 
      இம்மாதிரியான 'நியத குருமார்கள் தோன்றாநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்றனர்; பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக்கொண்டு அவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும்போது உடலை உகுத்துவிடுகின்றனர். 
   
      ஸாயீ நியத பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும். 
     உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மஞானத்தை அளிக்கிறாரோ, அவரே ஸத்குரு. ஸத்குருவே சம்சாரக் கட­ன் மறுகரையைக் காட்டமுடியும்; அவருடைய மஹிமை எண்ணத்திற்கப்பாற்பட்டது. 
      யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால ரகசியங்களனைத்தும் அவர் கேட்காமலேயே அவருக்குச் சொல்லப்படும். 
     இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட ஸாயீ, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்டவில்லை. 

      அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக்கோணல்) அவரைத் தொடவேயில்லை. 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...