சத்சரித்திரம் படித்தல்
நமக்கு பிரச்சனைகள் வரும்போது அதை நிவர்த்தி
செய்துகொள்ள, சத்சரித்திரம் படிக்கிறோம். அதில் பயப்படாதே.....இன்னும் எட்டு
நாட்களில் உன் பிரச்சனை சரியாகிவிடும் என்று எழுதப்பட்டு இருந்தால் அதனை அப்படியே
நம்பவேண்டும். அப்போது அப்பிரச்சனை எட்டு
நாட்களில் சரியாகிவிடும்.
சில நேரங்களில் நம்மை நமது நம்பிக்கையின் எல்லை வரை
அழைத்துச்சென்று கைவிரித்து விடுவதைப்போல பாபா செய்வார். அந்த நிலையிலும் நாம்
அவர் மீது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
பாபா, நான் பிழைத்தாலும், பிழைக்காமல் போனாலும் உன்
மீது நம்பிக்கையோடு இருப்பேன். நீங்கள்
எனக்குச் செய்தாலும் செய்யாமல் போனாலும் நான் உங்களை நம்புவதிலிருந்து மாறமாட்டேன்
என்று உறுதியாகச் சொல்லவேண்டும்.
ஏதாவது செய்வார் என நினைத்து வருகிறேன். ஆனால் எதையும் செய்யவில்லையே! இப்படிப்பட்ட கடவுளை எதற்காக தொடர்ந்து
நம்பவேண்டும் என ஒருபோதும் நினைக்க்க்கூடாது.
இன்னும் சற்று நம்பலாம். இன்னும்
சற்று நம்பலாம் என நம்பிக்கையின் காலத்தை நீட்டிக்கொண்டே போகவேண்டும்.
அப்போதுதான் பாபா நமக்குத் தரும் அழிவில்லாத சுகத்தினை
நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல்
குருவின் வார்த்தையைச் செயல்படுத்த்துவதற்க்கு நமது முழுமையான சக்தியினையும்
பிரயோகப்படுத்தவேண்டும். அப்படிச்
செய்யும்போது பாபா நமக்காக அதைச் செய்வார்.
வெட்டப்படவேண்டிய ஆடு ஒன்றினை, தன் முன்னர் சிலர்
கொண்டு வந்தபோது, எத்தனையோ பேரை அழைத்து பாபா அதனை வெட்டச் சொன்னார். யாரும் அவரது பேச்சுக்கு
கீழ்ப்படியவில்லை. தட்டிக் கழித்தார்கள்.
ஆனால் தீட்சிதர் அப்படியல்ல...தன் குரு சொன்னதால், வைதீகராக இருந்தபோதும் ஆட்டை
வெட்டுவதற்க்கு கத்தியை ஓங்கினார். அந்தக் கடைசி நேரத்தில் பாபா அதனைத் தடுத்து
அவரை பழியிலிருந்து காப்பாற்றியதோடு, ஆட்டினை இயற்கையாக மரணம் அடையவும் வைத்தார்.
எனவே ஒவ்வொரு சாயி பக்தனுக்கும் தேவை நம்பிக்கை, பொறுமை
மட்டுமே.
சத்குரு வாழ்க!
ச்ச்சிதானந்தம் வாழ்க!
பகவான் ஞான வள்ளல் வாழ்க!
குரு நன்றாய் வாழ்க!
குருவின் திருவடி வாழ்க!
ஜெய் சாய்ராம்!
No comments:
Post a Comment