Saturday, October 26, 2013

உதியின் பிரபாவம்

 உதீயின் இன்னும் ஒரு பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது, நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது. 
உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீரைப்போல் வாழ்ந்துவந்த நெவாஸ்கர் மஹாபாக்கியசா­. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையைக் கேளுங்கள்.
வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாகக் குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடுவார். 
 பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்திற்கும் யஜமானர் எனக் கருதித் தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்குத் தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார். 
 பாபா ஸ்நானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.  நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால் பகுதியாக மட்டுமே. 
 பாபா தேஹவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார். 
ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர். 
எதிர்பார்க்கப்பட்ட விருந்தினர்களுக்குத் தேவையான உணவு சமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் பரிமாற ஆரம்பித்தபோது எதிர்பார்க்கப்பட்டதுபோல் மூன்று மடங்கு விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்தது.  நெவாஸ்கரின் மருமகள் கதிகலங்கிப்போனார். தம் மாமியாரிடம் (பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் மனைவியிடம்) தம்முடைய பயத்தை மெல்­லிய குர­லில் கிசுகிசுத்தார், 'நாம் இந்த சங்கடத்தி­ருந்து விடுபடுவது எப்படி?

         மாமியாருக்கு பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ''ஸமர்த்த ஸாயீ நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்போது நமக்கென்ன கவலை? பயப்படாதே என்று மாமியார் தைரியம் சொன்னார். 
 இவ்வாறு மருமகளுக்கு தைரியம் அளித்துவிட்டு, மாமியார் ஒரு பிடி உதீயை எடுத்துக்கொண்டுபோய் உணவு சமைத்து வைத்திருந்த எல்லாப் பாத்திரங்களிலும் கொஞ்சங்கொஞ்சம் தூவிவிட்டு அவையனைத்தையும் துணியால் மூடிவிட்டார். 
 பிறகு அவர் சொன்னார், ''குஷியாக உணவை எடுத்துப் பரிமாறு. எந்தப் பாத்திரத்தையும் முழுவதும் திறக்காதே. உணவை முகப்பதற்குத் தேவையான அளவிற்குத் திறந்து, உடனே துணியால் மூடிவிடு. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் நீ உஷாராகச் செயல்படவேண்டும். இவ்வுணவு அனைத்தும் ஸாயீயின் இல்லத்து அன்னம்; ஒரு பருக்கையும் நம்முடையதன்று. அவமானம் வாராமல் காப்பவர் அவரே; பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே; நம்முடையதன்று.
அந்த மாமியாரின் நிச்சயமான நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவருடைய அனுபவமும் ஆயிற்று. எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்லா விருந்தினர்களுக்கும் திருப்தியடையும்வரை உணவளிக்க முடிந்தது. 
வந்தவர்கள் அனைவரும் விருந்துண்டு திருப்தியடைந்தனர். எல்லாம் நன்றாக நடந்துமுடிந்த பின்னரும் பாத்திரங்கள் முன்பு இருந்ததைப் போலவே உணவால் நிறைந்திருந்தன.

உதீயின் பிரபாவம் இதுவே. ஞானிகளுக்கு இதெல்லாம் சகஜமான 

சுபாவம். பக்தனைப் பொறுத்தவரை, பாவம் எப்படியோ அப்படியே

அனுபவம். 



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...