உருவமில்லாத இறைவன்
பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிர்டீயில் தோன்றினான்.
அவனை அறிந்துகொள்வதற்கு, முதல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும்.
பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும்.
சிர்டீ மக்களின் கூட்டுப்
புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில்
பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது
சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது.
விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த
ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. பாபாவினுடைய நிக்ரஹம்
(வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக
வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக
உடலை ஏற்றுக்கொண்டார்.
ஆஹா!
அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள்
அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய
நிஜமான இயல்பை இறைவனே அறிவார். வாக்கின் தேவதையாகிய
ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை
லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை
மனத்திற்கொண்டே பேசினார்.
இந்த
வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும்,
கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்லியே தீரவேண்டியிருக்கிறது.
பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ''அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா.லி.”

ஓ, பாபா
எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார். எளிமையாக இருப்பதற்கு
எவ்வளவு ஆவல். எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை. எவ்வளவு மரியாதை. பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று
நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு
என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட
வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
காதுகொடுத்துக் கேட்ட
பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்துகொள்ள
வேண்டுமெனில், ஸாயீநாமத்தை
ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும்
அகன்றுவிடும்.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment