புதுப்பெருங்களத்தூரில் உள்ள சாயி பாபா பிரார்த்தனை மையம்
கீரப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பாபா ஆலயங்கள், பிற ஆலயங்களை உருவாக்கித்
தந்துள்ளது. இதற்காக சாயி வரதராஜன் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது.
இதற்கானச் செலவுகளை சமாளிக்க சீரடி யாத்திரை போன்றவை நடத்தப்படுகிறது. இதுவரை சாயி தரிசனம் இதழ்
இலவசமாக அனுப்பப்பட்டு வந்தவர்களுக்கு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய சந்தா தாரர்கள்
சேர்க்கப்படுகிறார்கள். இலவசமாக நூறு இருநூறு புத்தகம் பெறும் அன்பர்கள் அதற்கான தொகையை, இனி அலுவலகத்தில் பணம் செலுத்தி
புத்தகம் பெறவேண்டும் என வேண்டுகிறோம்.
பெருங்களத்தூர் மற்றும் கீரப்பாக்கம் பாபா ஆலயங்களில்
வியாழன் மற்றும் ஞாயிறு தோறும் பிரார்த்தனை செய்யவும், மற்ற தினங்களில் முன்
அனுமதி பெற்று வரும் பக்தர்களை சாயி வரதராஜன் சந்திக்கவும் ஏற்பாடாகியுள்ளது. வெளியூர் தேதிகள்
அவ்வப்போது அறிவிக்கப்படும்.
பெருங்களத்தூர். கீரப்பாக்கம் தவிர்த்து பிற இடங்களில்
நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சாயி வரதராஜன் கலந்து கொள்ளமாட்டார். இனி அவரை பெருங்களத்தூரில் தரிசிக்கலாம்.
நிர்வாகத்துக்காக
சாயி வீரமணி
No comments:
Post a Comment