நூல்கர் தனது வீட்டிற்குச் செல்ல விடைகேட்டார். அது 1910-ம் ஆண்டு. முதலில் விடை கொடுத்த பாபா, பிறகு அவரைக்கூப்பிட்டு,
“அவனை லெண்டிபாக்கில் எரித்துவிட்டுப் போ” என அவரைக் காட்டியே சொன்னார். அவர் கூறியதன்
பொருள் யாருக்கும்
தெரியவில்லை. மகல்சாபதியும் இதைப் பற்றி யோசித்தார் என்றாலும், ,அவருக்கும் எதுவும் தெரியவில்லை. நூல்கருக்கு ஏதோ ஆபத்து ஏற்படப் போகிறது
என்பது மட்டும்
மகல்சாபதிக்குப் புரிந்தது.
நூல்கர் லெண்டித் தோட்டத்தில் தனது உடல் தகனம் செய்யப்படவேண்டும்
என்ற விருப்பம் கொண்டவராக
இருந்தார். அவரது கடைசி விருப்பமும் அதுவே! அவ்வாறே அவர் விரைவில் இறந்துவிட அவரது உடலை லெண்டிபாக்கில் தகனம் செய்தார்கள்.
பாபா அவன் எனக் குறிப்பிட்டது நூல்கரின் உடலையாகும். நூல்கர்
இறக்கும் தருவாயிலும் நல்ல புத்தி சுவாதீனத்தோடு இருந்தார். சகஸ்ரபுத்தே அவருடைய வாயில் பாபாவின் பாத தீர்த்தத்தை ஊற்றியபிறகே உயிர் நீத்தார்.
No comments:
Post a Comment