நான், என் மனைவி மற்றும் மகன் மூவரும் 13 ஆண்டுகளாக சாயி பாபாவை வணங்கி வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் அவர் நடத்திய அற்புதங்கள் பல. சில ஆண்டுகளுக்கு முன் என் மகனுக்கு பதவி உயர்வு கிடைக்காமலிருந்தது. கோயில்களில் வேண்டிக்கொண்டோம். ஜோசியரிடம் ஜாதகப்பலன் கேட்டோம்,
அருள்வாக்கு சொல்லும் பெரியவரிடம் போய்
வந்தோம், எதுவும் நடக்கவில்லை.
கடந்த ஆண்டு, ஜுன் மாதம் என் மகன் சீரடி
சென்று துவாரகாமாயியில்
அமர்ந்து பதவி உயர்வு வேண்டி பிரார்த்தனை செய்தான். அற்புதம் நிகழ்த்தினார் ஸ்ரீ பாபா. ஒன்பது மாதங்களில் பதவி உயர்வு கிடைத்தது.
கடந்த தீபாவளி அன்று காலை நாங்கள் கவுரி வாக்கம் பாபா ஆலயத்திற்குப்
புறப்பட இருந்தோம். அப்போது கோவையிலிருந்து ஒரு போன் தகவல் வந்தது. என்
மைத்துனரின் மனைவி நோய்
வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும், மருத்துவர் கூற்றுப்படி இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றும்
கூறினார்கள்.
கவுரிவாக்கம் கோயிலில் பிரார்த்தனை செய்தோம், பத்து நாட்களில் அவர் நலமாகி வீடு திரும்பினார். 2015 டிசம்பரில் சென்னை
முழுவதும் இயற்கை சீற்றத்தால் அவதிப்பட்ட விஷயம் நாடு அறிந்ததே. வேளச்சேரி மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி. நாங்கள்
வேளச்சேரியில் எட்டு மாதங்களாக வசித்து வருகிறோம். கீழ்த்தளத்தில் வீடு. இருந்தும் பாபாவின்
கிருபையினால் ஒரு வாளி தண்ணீர்கூட
வீட்டின் உட்புறம் வரவில்லை. பாதிப்பில்லாமல் காத்தருள் செய்தார். ஸ்ரீ பாபாவை
நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் துதித்து வந்தால் எல்லாவித நன்மையும் நிச்சயமாக
அடைவீர்கள்.
வைத்தியநாதன், வேளச்சேரி
No comments:
Post a Comment