நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Monday, July 4, 2016

தானம் பெரிது...

பல ஊர்களுக்கும்  யாத்திரை சென்ற குரு நானக் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் குரு நானக்கை தன் வீட்டிற்கு  விருந்து  சாப்பிட அழைத்தார்.
      " இந்த  ஊரிலேயே மிகப்  பெரிய  பணக்காரன்  நான் தான். நினைத்ததை  சாதிக்கும் பலம்  என்னிடம் உள்ளது. உங்களுக்கு ஏதாவது  உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம்  கேளுங்கள்," என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
       சற்று  யோசித்த  குரு  நானக்," ரொம்ப  நல்லது!  அப்படி யானால் எனக்கு ஒரு   உதவி தாங்கள் செய்ய வேண்டுமே|" எனறு  கேட்டார்.
        என்ன உதவி  சுவாமி...எதுவாக இருந்தாலும்  தயங்காமல் என்னிடம் கேளுங்கள். நான் அதனைச் செய்ய  காத்திருக்கிறேன்." என்றார்  பணக்காரர். தன் பையில்  இருந்த  ஊசி ஒன்றை  எடுத்து, குரு நானக் பணக்காரரிடம்  நீட்டினார். 
                      " இந்த  பழைய  ஊசியைக்கொண்டு நான் என்ன செய்ய
வேண்டும்’ என்றார் பணக்காரர்.
         " இதைப்பத்திமாக  வைத்திருங்கள்  நாம்  இருவரும்  மேலுலகத்தில்  சநதிக்கும் பொழுது திருப்பிக் கொடுத்தால் போதும் " என்றார் குரு நானக்.
           ’இறந்த  பிறகு  இந்த  ஊசியை நான் எப்படி  கொண்டு வர
முடியும் " என்று  கேட்டார்  பணக்காரர்.
           அவரைப்பார்த்து  சிரித்த குருநானக் ,"இந்த உலகை விட்டுப்  போனால்  சிறு  ஊசியைக் கூட  கொண்டு போக முடியாது என்று  நீங்களே ஒத்துக்  கொள்கிறீர்கள். ஆனால்  நினைத்ததை  சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை  பேசுகிரீர்களே.....ஒருவன் செய்த
நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட  வரும்.செல்வத்தால்
யாரும்  கர்வப்படத்தேவையில்லை. அதை இல்லாவர்க்கு கொடுத்து உதவுங்கள்.அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும் " என்று அறிவுரை  கூறினார்.
         பணக்காரரும்  அவரது உபதேசத்தை  ஏற்று  தானம் செய்ய ஆரம்பித்து  விட்டார்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்