நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Wednesday, July 27, 2016

சாயியின் குரல்கொட்டிக்கிடக்கும் எனது பொக்கிஷங்களுக்கு உன்னை கூட்டிச் செல்ல நினைக்கிறேன். நீயோ உலக பொருட்களுக்காகவே என்னை நாடிக் கொண்டிருக்கிறாய். நானும் உன் வேண்டுதல் அனைத்தையும் உனக்கு வழங்கி கொண்டிருக்கிறேன். ஏன் தெரியுமா,  நீ எல்லாவற்றிலும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். உன்னிடத்தில் எனக்கு ஒரு சிறு குறை உண்டுஅதை நீ சரி படுத்திக்கொள்வாயா?
உனது சாயி பக்தி, என்னையும் பிறரையும் வசியப்படுத்துவது போலவே, உன்னுடைய மனதுக்குள் யாருக்கும் தெரியாது என ஒளித்து வைத்திருக்கிறாயே கபடம், சுயநலம் போன்ற குணங்களை! அது என்னை வருத்தப்பட வைக்கிறது. இதை நான் அறிய முடியாது என நினைக்கிறாயா?
நான் பற்றற்றவனாக இருந்தும் எனது சிந்தனைகள் செயல்கள் அனைத்தும் உங்களை பற்றியே இருக்கவில்லையா? உங்களை கடைத்தேற்றுவதாக சங்கல்பம் செய்துகொண்டு நான் உங்கள் கூடவே இருக்கவில்லையா? என் பிள்ளைகளின் இதயக் குமுறலை கேட்கச்சகிக்காமல் அவர்களுக்காக நான் இரங்கி இரங்கி ஏழையாகவில்லையா? நீ முற்றிலும் என்னைப்போலாக வேண்டாம். ஆனால், எனது அடிச்சுவட்டையாவது பின்பற்றலாம் அல்லவா அதற்காகத்தானே நான் உன்னிடம் வலிய வலிய வருகிறேன்.
உன்னிடம் இருப்பதை, உனக்கென இருப்பதில் கொஞ்சம் தானம் செய், நீதியை போதனை செய், உன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை களைந்துவிடு. அப்போது என் பேரருள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உன்னை வந்தடையும்.                                                                                                    
                                                                                                                                
                                                                                                                                  சீரடி சாயி பாபா

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்