நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Monday, July 25, 2016

சாயியின் குரல்

அன்புக் குழந்தையே!

நீ எதையெல்லாம் வைத்திருந்தாயோ, அதையெல்லாம் இப்போது இழந்து தவிக்கிறாய்! எவையெல்லாம் உனதாக இருந்தனவோ, அவையெல்லாம் நழுவி பிறரின் வசமாயின. எதையெல்லாம் நம்பினாயோ, அதுவெல்லாம் உன்னை கைவிட்டன. இப்போது நிராயுதபாணியாக நீ, இதுதான் உனது நிலை. எப்படி ஜெயிப்பாய் என பலர் உன்னை கேலி செய்யலாம். ஆனாலும் நீ பயப்படாதே! எல்லாம் பழைய சோறு, நானோ உனக்கு புதியதாக சமைக்கப்போகிறேன், உன்னுடைய பசியாறும்.

நீ இப்படி சோர்ந்து போனால் எதையும் சாதிக்க முடியாது. இதோ நான் சாரதியாக வந்துள்ளேன், நீ எனது அர்ஜூனன், எனக்கு பிரியமுள்ள நண்பன். துன்பம் என்கிற எதிரியை துரத்திட எனது துணையோடும், எனது பலத்தோடும் போர்க்களம் வந்து நிற்கின்ற அர்ஜூனன் நீ! கண்களை திறந்து பார் நானே உனது ஸ்ரீ கிருஷ்ணன். என் பிரியமான நண்பனுக்கு நான் சாரத்தியம் செய்யும்போது எந்த துன்பம் உன்னை தொட முடியும்! உன் மனமெனும் தேரில் நான் அமர்ந்து வழி நடத்திச் செல்லும் போது இனி உன்னை யாரால் வெற்றிக்கொள்ள முடியும். ஒரு நிமிடம் உனது கண்களை மூடி என்னை தியானித்து எனது ரூபத்தை உற்றுப்பார். நான் கிழவன் போல காணப்பட்டாலும் கிழவன் அல்ல.. இளைஞன், எல்லையில்லா பராக்கிரமமும், சக்தியும் பெற்றவன். உனக்கு மட்டும் கருணையுள்ள தாய்! உண்மையாக தோள்கொடுத்து தாங்கும் நண்பன்... உனது வாழ்வை கெடுத்தவர்களுக்கோ உயிர் குடிக்கும் காலன் நான்

                                                                                                                                சாயியின் குரல்

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்