யார் சோம்பேறி

செய்யவேண்டிய செயலைச் செய்ய தயங்குகிறவர் சோம்பேறியா? செய்யாதவர் சோம்பேறியா?
என்.பிரபாவதி, செஞ்சி


சோம்பேறி என்பவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன் என்றொரு பழமொழி இருக்கிறது. எந்த வேலையையும் செய்யாதவன் சோம்பேறி. அப்புறம் செய்ய லாம் என செய்யத் தயங்குபவனுக்கு பால் மாறி என்று பெயர்.
இரண்டு பேர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். குளித்து முடித்தபின் நெற்றியில் திருநீறு இடுவதற்காக நாமக் கட்டியைக் குழைக்க வேண்டியிருந்தது. இதைக் குழைக்க மறுபடி தண்ணீரில் இறங்கவேண்டுமா எனத் தயங்கி எச்சிலைத் துப்பி நாமக்கட்டியைக் குழைத்தான்.
நான் எங்கே எச்சிலைத் துப்புவது, நீயே கொஞ்சம் துப்பு என்று கையை நீட்டினான் இன்னொருவன். முன்னவன் பால் மாறி, பின்னவன் சோம்பேறி. (வாரியார் சொன்னது)

Powered by Blogger.