காமதேனுஸ்ரீ கிருஷ்ணரிடம் உள்ள பசு காமதேனுவா? வேறு ஏதேனும் உணர்த்துகிறதா?
என்.ஸ்ரீமதி, செஞ்சி

சாயி புத்ரன் பதில்கள்

கிருஷ்ணர் ஒரு பசுவை வைத்திருப்பது போன்ற படத்தைப் பார்த்து இந்தப் பசு காமதேனு என்பார்கள். உண்மை எதுவெனில் நாம்தான் அந்தப் பசு. பகவானிடத்தில் இருக்கிற பசுவாகிய நாம், பாலாகிய உள்ளத்தூய்மையைத் தரவேண்டும். தயிராகிய குளிர்ந்த இயல்புடன் இருக்கவேண்டும். வெண்ணெய் போல பிறருக்காக உருகும் இயல்பு கொண்டவராக இருக்கவேண்டும். எந்த நிலையிலும் பகவானை விட்டு விலகக் கூடாது என்பதுதான் அதன் பொருள்.
Powered by Blogger.