சென்னையில் திருமுல்லைவாயில் என்ற ஊர் இருக்கிறது. மிகப்
பழமையான ஊர். கிருதயுகத்தில்
பிருகு முனிவர் வேண்டுதலுக்காக இரத்தின மழை பெய்தமையால், இந்த ஊருக்கு இரத்தினபுரம் என்றும்,
திரேதாயுகத்தில்
வில்வ வனமாக இருந்ததால் பில்வாரண்யம் என்றும், துவாபரயுகத்தில் சண்பகச் சோலையாக இருந்ததால் செண்பகாரண்யம் என்றும் பெயர்
பெற்றிருந்தது. கலியுகத்தில் மாலதி வனம் என்ற பெயரில் வழங்கப்பட்டது, அதன் பிறகு முல்லை வனமாக
இருந்ததால் முல்லை வனம் எனப் பெயர் பெற்றது.
உத்திரமேரூரை உருவாக்கிய உத்தம சோழன் கி.பி.975 முதல் கி பி 985 வரை அரசாண்டான். அவன் காலத்திய
கல்வெட்டுக்கள் இங்குள்ள சிவாலயத்தில் உள்ளன.
No comments:
Post a Comment