சாயி தர்மம்உலகில் இன்றைக்கு மட்டுமல்ல, ஆதி காலத்திலிருந்தே ஆன்மிகம் இளைஞர்களால்தான் எழுச்சியடைந்திருக்கிறது என்பதை சமய வரலாறுகளைப் படித்தவர்கள் அறியலாம்.
இளைஞர்களின் செயல்திறன், உத்வேகம், கறைபடியாத இரத்தம், அவர்களின் நோக்கு போன்றவை இந்த சாதனைகளை எட்டிப்பிடிக்க வைத்தது. அதனால்தான் விவேகானந்தர் எனக்கு நூறு இளைஞர்களைக் கொடுத்தால் போதும், இந்தியாவை மாற்றி அமைத்து விடுவேன் என்று கூறினார்.
வயது ஆக ஆக செயல்திறன் குறைந்து சொற்பொழிவு ஆற்றும் நிலைக்கு ஆன்மிக வாதிகள், பெரியோர்கள் வந்துவிடுவதால் அவர்களால் வேகமாக ஆன்மப் பணிசெய்ய முடிவதில்லை.
விவேகானந்தர் முப்பதேழு ஆண்டுகள்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் இந்து சமயத்தை கடல்கடந்து பரவச் செய்தார். இயேசு கிறிஸ்து 33 ஆண்டுகள் வாழ்ந்தார். உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஆன்மிகத்தைப் போதித்தார். புத்தர் இளம் வயதில் தான் துறவு மேற்கொண்டு சமூகத்தை மாற்றினார். ஸ்ரீ ராமன் இளைஞராக இருந்த காலத்தில்தான் இதிகாச வேந்தனாக உயர்ந்தார். இராவண வதத்திற்குப் பிறகும், சீதையின் மறைவுக்குப் பிறகும் நெடுங்காலம் வாழ்ந்தாலும் அவரது வாழ்க்கையில் சுவையில்லை. கண்ணபிரான் இளைஞராக இருந்த காலத்தில்தான் உலகை திரும்ப வைத்தார்.
மாவீரன் அலெக்சாண்டர் போன்ற மாவீரர்கள் கூட இளம் வயதில் சாதித்தார்கள். ஆக. இளம் வயது என்பது சாதிக்கின்ற வயது; இலக்குகளை நோக்கி வேகமாகப்பயணிக்கிற வயது; தடைகளைத் தகர்த்து வெற்றியை நோக்கிச் செல்கிற வயது. இந்த வயதில் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தால் வெற்றி பெற முடியும்.
இதேபோல, எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் குறுகிய காலத்தில்தான் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பாபா 1909 - 1910 முதல்தான் கடவுளாக வணங்கப்பட்டார் என ஆதாரங்கள் கூறுகின்றன. எட்டு ஆண்டு காலத்தில்தான் அவர் முழுமையாக உணரப் பட்டார்.
இந்த வாலிப வயதும் மிகக் குறுகிய காலமே நிலைக்கக்கூடியது என்பதால், வாலிபர்களாக இருக்கிற நீங்கள் இந்த சாயி தர்மத்தைத்தோளில் சுமக்க வரவேண்டும். சாயி தர்மம் என்பது பெரிய விஷயமல்ல, தியாகம்; பிறருக்காக வாழ்தல், நம்மால் முடிந்ததைச்செய்தல் போன்றவை மட்டுமே!
இதை இப்போது நாம் நமது கையில் எடுக்கிறோம், செயல்படுகிறோம். சாயி தரிசனத்தில் இளைஞருக்கான பகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் புதிய விஷயங்களைக் கொண்டு வர உங்களின் அறிமுகத்தையும் தொடர்பை யும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Powered by Blogger.