சஹஸ்ரபுத்தே என்ற சாயி பக்தர் பாபாவின் முன்னிலையில்
அமர்ந்திருந்தார். அவர் மனதில் குருவானவர் தம் சிஷ்யனைத் தன்னைப் போலவே ஆக்குகிறார் என சாஸ்திரங்கள் கூறுகின்றனவே!
இந்த பாபா ஏன் இன்னும் என்னை தன்னைப்
போல் ஆக்கவில்லை என்று மனதில் நினைத்தார். இந்த நினைவு தொடர்ந்து மூன்று நாட்கள் வரை இருந்தது. பாபா ஷாமாவிடம் பேசும்போது சஹஸ்ரபுத்தேயை சுட்டிக்
காட்டி, “இந்தப் பயல் என்னைத்
துரத்திவிட்டு என் இடத்திற்கு வர விரும்புகிறான். ஆனால் அதற்கு நிறைய பொறுமை தேவை” என்றார்.
பாபா என்ன சொன்னார் என்பது புத்தேவைத்தவிர வேறு
ஒருவருக்கும் விளங்கவில்லை.
No comments:
Post a Comment