சாயி பக்தன் செய்யவேண்டியவை: எந்த நிலையிலும்
நம்பிக்கையோடு இரு; பொறுமையை இழக்காதே! உலகம் தலை கீழாக மாறட்டும், நீ இருந்த இடத்திலிருந்து உன் கடமையைச் செய். அந்தக் கடமையை கடவுளுக்கு அர்ப்பணித்துச் செய்.
பிறரைப் பற்றி அவதூறு பேசாதே; அகம் பாவம் கொள்ளாதே. உன்னைப் போல
பிறரும் வாழப்
பிறந்திருக்கிறார்கள். எனவே நீ வாழ பிறரைக் கெடுக்காதே! பிறர் நிலை தாழும்போது தகுதியை மீட்டுத்தரவும்,
தகுதியே இல்லை என்பவர்களைத் தகுதி
படுத்தவும் சாயி வந்தார்.
சத்சரித்திரம் பத்தாம் அத்தியாயத்தை ஆழமாகப் படித்தால் பாபாவின்
வழிமுறைகள்புரியும்.
“தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டு
முறையையோ அவர் வகுத்து உரைக்கவில்லை. அல்லது எவ்வித மந்திரத்தையும் எவர் காதிலும் அவர் ஓதவில்லை. எல்லாவித
புத்திசாலித்தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் சாயி சாயி என்று
ஞாபகமூட்டிக் கொள்ளும்படி அவர்களிடம் கூறினார். இதைச் செய்வீர்களானனல் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார்.
சும்மா இருக்காதே; அவர் மேல் நிலைக்கு வர கைகொடுத்து உதவு. தியாகம்
செய். எல்லோரிலும்
கடவுளைப் பார்; உன்னைப்போல அவர்களை நேசி. உன்னிடத்தில் கேட்பவனுக்குக் கொடு, கொடுக்க மனம் இல்லாமல் போனால் அதை அமைதியாக
எடுத்துக்கூறு.
வந்தவனிடம் அதிர்ந்து பேசாதே. தூய அன்பு, உண்மையான பக்தி, நேர்மை, சுயநலம் இல்லாத மனம் இவை
மட்டும் இருந்தால்போதும், அவரை வழிபட வேறு எதுவும்தேவையில்லை, இருந்த இடத்தில் இருந்துகொண்டு சாயி சாயி என ஜபம் செய்.. நான்
உன்னை உனக்குத்தெரியாமல் சிரமமில்லாமல் தகுதிபடுத்துகிறேன் என்பதே சாயி வழிபாடு.
பாபா சொன்னார்: “நீ சிரமப்படாதே! எப்படி இருக்கிறாயோ அப்படியே
என்னிடம் வா, நான் உன்னை சிறிது
சிறிதாக மாற்றுகிறேன்”. பெரிய அளவில் இறைவனிடம்
கொண்டு சேர்க்க பாபா காட்டுகிற உபாயம் இது.
ஆகவே, நீ உயர்பிறப்பாளனாக இருந்தால் உன்னை விரைவில் இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மார்க்கமாக தன்னை அவர் உன்னிடம் வெளிப்படுத்துகிறார்.
தகுதிபடுத்த வேண்டி இருந்தாலும் அவர் உன்னிடம் வந்திருக்கிறார்.
ஞானியரின் கதையைக் கேட்டல், வாக்கை பின்பற்றுதல் போன்றவற்றின்
மூலமே பிறப்பு இறப்பு என்கிற
சங்கிலியை அறுத்து உயர் நிலை எய்தச் செய்கிறார் பாபா.
நீங்கள் உங்கள் உலகக் கடமைகளைச் செய்து கொண்டோ, கவனித்துக்கொண்டோ
இருக்கலாம். ஆனால் உங்களது மனதை
சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள், பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும் என்கிறது சத்சரித்திரம்.
எனவே, சாயி பக்தன் என்று சொல்லிக் கொள்கிற நீ, பாபா போல எல்லோரையும் நேசிக்கக் கற்றுக்கொள்; சேவை செய். அவர் தன்னை இறைவனாக உயர்த்திக் கொள்ள சதா நாம ஜெபம் செய்தார். நீ உன்னை உயர்த்திக்கொள்ள சதா அவரது நாமத்தை ஜெபம் செய்.
அவர் எல்லோரையும் மன்னித்து யாரையும் கைவிடாமல் இருப்பதுபோல
நீயும் உனக்கு அடுத்தவரை
மன்னித்துவிடு. நிலையில்லாத வாழ்க்கையில் கிடைத்ததை இழக்காமல் அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்! இப்படிச் செய்தால் இறைவன் அருளை விரைந்து பெறுவாய்.
No comments:
Post a Comment