நிழலுக்குக் கூட கோயில் பக்கம் செல்லாதவர்களின் மனதை மாற்றிய புதிய வேதம் ஸ்ரீ
சாயி தரிசனம். எம் பள்ளியில் புத்தகத்தினைக் கொடுத்து எல்லோரையும் படிக்க வைத்தேன். அவ்வளவு விரைவில் மனம் செம்மையாக்குகிற
கட்டுரைகள். அதிலும் உனக்குச்செய்வேன் என்ற கட்டுரை எல்லோரையும் மாற்றிவிட்டது. மனோ தத்துவ முறையில்
மன மயக்கம் தெளிந்து நம் கடமையை உணர்த்தும் வரிகள்.
இதே முறையைத்தான் அடியேன் பள்ளியில் பத்து,
பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குக் கூறுவேன்.
அவர்கள் உணர்ந்து தெளிந்து அடுத்த முறை தேர்வு வைக்கும்போதுஅதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.
சமுதாய மனமாற்றத்திற்கு இவ்வகை எழுத்துக்கள் தேவை. தொடரட்டும் இப்பணி. ஒவ்வொருவரின்
மனக்குறை தீர வேண்டுமாயின் பாபா தரிசனம் &
சாயி தரிசனம் இதழ் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க முயற்சிக்கிறேன்.
வே. பாபு, ஆசிரியர்
No comments:
Post a Comment