Wednesday, July 6, 2016

கடவுளின் ரியாக்ஷன்




கடவுளை ஒருவன் எப்போது உண்மையாக கூவி அழைக்கிறான். அப்போது கடவுளின் ரியாக்ஷன் எப்படியிருக்கும்?

அருணகிரி, திருவள்ளூர்


 சாயி புத்ரன் பதில்கள்
தனக்கு மிகச்சங்கடமான நிலைமை வரும்போது கஷ்டத்தைத் தாங்கமுடியாமல் முழுத் தீவிரத்துடன் இறைவனை கூவி அழைக்கிறானே அது தான் உண்மையான அழைப்பு. இதை கடவுள் பக்தியாக மாற்றி, மனிதனின் புத்திக்கண்களை திறந்துவிட்டு அவனுடைய நிஜ ரூபத்தைக் காணும்படி செய்கிறார். அதன் பிறகு அவனது ஆன்மிக அதிகாரம் என்ன? இது வேலை ஆகும் வரை நீடிக்கிற பக்தியா? தொடருமா? கஷ்டநிவர்த்திக்குத் தகுதியான வனா? தகுதியற்றவனா என்று அறிந்த பிறகே பக்தரின் பாரத்தைத் தம் மேல் ஏற்று அருள் செய்வார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...