எனக்கு இன்னும் புரியாத விஷயம், ஆன்மிகம் என்றால்
அனைத்தையும் துறந்து விடுவது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் கோயில் கட்டி, விழா எடுத்து, அற்புதங்கள் செய்து பிரபலமாக வாழ்வது என்கிறார்கள். இதில் எது உண்மையான
ஆன்மிகம்? புரியுமாறு கூறுங்கள்.
கீதா ப்ரியா, திருச்சி - 2
சாயி புத்ரன் பதில்கள்
இரண்டுமே ஆன்மிகம்தான். பாபா ஒருவரை ஆன்மீகத்தில் இழுத்துச் செல்வது முக்தி நிலையை அடையச் செய்வதற்காக
- யோக சாதனைகள் செய்யும்போதே பல சித்திகள் வசப்பட ஆரம்பிக்கும். இவை அனைத்தும் சாதகனை
ஈர்த்து மோகம் கொள்ளச் செய்து ஆன்மிகத்திலிருந்து வழுக்கி விழ வைத்துவிடும். இதிலேயே
நின்றுவிட்டால் ஆத்ம ஞானம் சித்திக்காது. ஆத்ம ஞானத்தைத் தேடும் வழியை உணராதவர்களும்.
வழியிலேயே தடுக்கப்பட்டு விடுபவர்களும்தான் அருள்வாக்கு சித்தர்களாக
மாறிவிடுகிறார்கள். இத்தகையது ஆரம்ப நிலை ஆன்மிகம்.
ஒரு யோகி தன் நோக்கமான மோட்சத்தை நோக்கிச் செல்லும்போது
இப்படிப்பட்ட சித்திகள்கூட இடையூறுகள் என நினைத்து அற்புத சக்திகள், பணக்காரர்கள், முகஸ்துதி பாடுவோர் என வலிய கிடைக்கும் சங்கத்தை
(கூட்டுறவு) விலக்கிக் கொண்டு போகவேண்டும்.
No comments:
Post a Comment