அன்புக் குழந்தையே!
நான் அனைத்தையும் கவனித்துத்தான் வருகிறேன். என் கண்களில் இருந்து எது தப்ப முடியும்? ஆனால் உங்கள் தவறுகளை கனிவுடன் மன்னிக்கிறேன். ஆரம்ப காலம் முதல் நீங்கள் என் மீது உண்மையான அன்பு வைத்து என்னை உங்களது குழந்தை போல பாவித்ததை நான் மறந்துபோகவில்லை, உங்கள் மீது நான் எப்போதும் பரிவுடன் இருக்கிறேன்.
நீ என்றைக்கோ முன்னேறி வாழ்வின் உச்சத்தை தொட்டு இருக்க வேண்டும். உனது பிடிவாத குணம், முரட்டு சுபாவம் ஆகியவை நிம்மதியற்ற வாழ்வை தந்துவிட்டது. சொர்க்கத்தை உருவாக்க நினைத்த நீ சந்தர்ப்பவாத குணத்தால் ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாய். அதை நினைத்து என் மனம் பதைக்கிறது. கெட்டவர்கள் கெடுபலனை அனுபவிப்பார்கள் ஆனால் நல்லவர்களாகிய நீங்களும் கெடுபலன் அனுபவிப்பது ஏன்?
இந்த வாழும் காலத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள். கவலைகளை தூக்கி எறி. எதை எடுத்துக் கொண்டு போகப்போகிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் என் போக்கில் விடு. சிந்தனையை என் பக்கம் திருப்பு. செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...................... சாயியின் குரல்