Thursday, June 1, 2017

ராமரும் ஸாயியே!


மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டரான, அவரது நண்பர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார்.  ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் வந்தவரை அழைத்தார். அந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.

அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும். நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...