என் அன்புக் குழந்தையே!
உன் மனதில் தோன்றிய கவலைகளாலும், நீ அடைந்த துன்பங்களாலும்
எதிர்காலத்தைப் பற்றிய பயத்தாலும், உன் உடல் கட்டுக்கோப்பை இழந்து, வாடி, மெலிந்து, கண்களில் ஒளியில்லாமல் சோபை
நீங்கியிருப்பதை பார்த்து நெஞ்சம் உடைந்தேன்.
குழந்தையே! நான் உனக்கு என்னை
வெளிப்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு நிகழ்விலும் உன்னோடு இருப்பதை
உறுதிபடுத்திக்கொண்டே இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் என்னைக்
காணவில்லை என்றும், உன்னை கைவிட்டு நான் எங்கோ மறைந்துகொண்டேன் என்றும் நீயாக உன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
என் மீது வெறுப்பு காட்டுகிறாய்.
நீ என்னைப்பற்றி நினைத்துகொண்டிருக்கும் அதே
வேளையில், நீ சற்றும் எதிர்பாராமல், உன் முன்னால் வந்து நிற்கும், எந்த வண்டியிலாவது, என் சித்திர ரூபத்தை கண்டுவிட்ட
மகிழ்ச்சியை நீ எப்படியெல்லாம் கொண்டாடி மகிழ்வாய். அப்படிப்பட்ட நீயா, இன்று இந்த நிலைமையில்
இருப்பது? உன்னை நான் இந்தக்கோலத்திலா பார்க்க வேண்டும்? என் மனம் உடைகிறது
குழந்தையே! சாதுக்கள் மூலமாகவும், ஞானிகளின் மூலமாகவும் மனதை இலகுவாக்கிக்கொள், சமநிலைப் படுத்து, பற்று நீக்கு! என்றெல்லாம்
எடுத்துச்சொன்னேன். ஆனால் நீயோ அதை காது கொடுத்தும் கேட்கவில்லை.
நீ தாழ்ந்திருந்த
போது உன்னை காப்பாற்றினேன். உன்னையும், உன்னைச்
சார்ந்தவர்களையும் உயர்வாக வைத்துக் காத்தேன். நான் இன்னொருவர் ரூபத்திலும்
இருப்பேன் என்பதை உணர்ந்து, பிறரை உன் நாவினால் புண்படுத்தாமல் இருந்தாய். ஆனால்
சமீப காலமாக நீ எப்போதும் சண்டை போடுகிறாய்.
கவலைப்படாதே, உன்னோடுதான் நான்
இருக்கிறேன், உன்னை எந்த தீமையும் தீண்ட விடாமல் பார்த்துக் கொள்வேன். என் குழந்தைகளை நான்
ஒரு போதும் எந்தச் சூழலிலும் கைவிட மாட்டேன்...................... சாயியின் குரல்
No comments:
Post a Comment