Friday, June 2, 2017

நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை


1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் முன் அமர்ந்து சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை  சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்தப் பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா
(ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...