Thursday, June 15, 2017

நான் எங்கும் வியாபித்து இருக்கிறேன் !


நான்  உங்களுக்கு  சீரடி  கிராமத்திலேயே இருக்கிற மாதிரி  தெரிந்தாலும்,  இந்த  உலகத்தில் எந்த மூலையில்  நடக்கிற  ஒவ்வொரு  விசயமும்  எனக்குத்தெரியும். உலகத்தில் நீங்கள்  எங்கு  வேண்டுமானாலும்  இருக்கலாம், என்ன  வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால்  ஒன்று மட்டும்  நன்றாகத்  தெரிந்துக்  கொள்ளுங்கள்.
நீங்கள்  செய்கின்ற  ஒவ்வொரு  வேலையையும், நான்  நிழலாகப் பார்த்துக்கொண்டேதான்  இருக்கிறேன். என்னிடம்  நம்பிக்கையோடு வேண்டினால்  வேண்டியது  நிச்சயம் கிடைக்கும். என் முன்  கையேந்தும்  பக்தர்களுக்கு,  அவர்களை என்றும் நான்  வெறும்  கையுடன்  போக விட  மாட்டேன்.
இந்த  உலகத்தில்  எந்த  மூலையில்  இருந்து  வேண்டினாலும்,  நான்   ஓடோடி  வந்து  ஏதோ  ரூபத்தில்  உங்கள்  முன்னாடி  வந்து காப்பேன். இந்த  அண்டம்  என் கட்டளைக்கு  கட்டுப்பட்டு  நடக்கும், நம் வாழ்க்கையை  நிச்சயம்  இவர் காப்பாற்றுவார்  என என்னை  நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் நான் நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு  உயர்ந்த  வாழ்க்கையை  கொடுப்பேன். வாழ்க்கையின் இறுதி  கட்டத்தில்  என்னுடன் ஐக்கியம்  ஆக்கிக்கொள்வேன் .
                       

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...